கேபிள் பதிக்கும் போது மரம் வேரோடு சாய்ந்தது இயற்கை ஆர்வலர்கள் வேதனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2017
22:54


உடுமலை: உடுமலையில் தனியார் கேபிள் பதிப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் பணியின் போது, நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த மரங்களில் வேர்கள் வெட்டப்பட்டு காய்ந்து வருகிறது. அதிகாரிகளின் அலட்சியத்தில் நுாற்றாண்டை கடந்து நிற்கும் மரங்கள் அழிந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உடுமலை - மூணாறு மற்றும் திருமூர்த்திமலை ரோட்டில் நெடுஞ்சாலையோரத்தின் இரண்டு பக்கங்களிலும் நுாற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் காணப்படுகின்றன. இம்மரங்கள் அனைத்தும் நெடுஞ்சாலைத்துறை, ஊராட்சி நிர்வாகங்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

புளியமரங்கள் அதிகளவில் காணப்படுவதால், அதன் மேல் கிடைக்கும் பலன்களை அனுபவிக்க, ஒப்பந்ததாரர்களுக்கு ஏலம் விடப்பட்டு வருவாய் ஈட்டப்படுகிறது.

அழியும் மரங்கள்

கடந்த ஒருமாதமாக அமராவதி, தளி ரோட்டில் தனியார் கேபிள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக நெடுஞ்சாலையோரங்களில் பொக்லைன் இயந்திரம் கொண்டு குழிகள் தோண்டப்படுகின்றன.

நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போது அதிகாரிகள் ஆய்வு செய்யாததால், ஒப்பந்ததாரர்கள் மரங்களை பற்றிய அக்கறை இல்லாமல் அனைத்து மரங்களின் பக்க வேர்களையும் வெட்டியுள்ளனர்.

இதனால் ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையினால் காய்ந்து வந்த மரங்கள், தனது உயிர் நாடியான வேர்களை இழந்ததால் பட்டுப்போய் நிற்கிறது. இது இயற்கை ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மரம் சாய்ந்தது

இவ்வாறு மரங்கள் உயிர் வாழ்வதற்கு ஆதாரமான வேர்கள் வெட்டப்பட்டதால், வளர்வதற்கு வழியில்லாமல் சாய்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலையில் தளி ரோட்டில் மடத்துார் பிரிவு அருகில், நுாற்றாண்டை கடந்த புளியமரம் ஒன்று அடியோடு சாய்ந்தது.

இதில் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவருக்கு தலையில் காயத்துடன் உயிர் தப்பினார். அதிகாரிகளின் அக்கறையின்மையாலும், ஒப்பந்ததாரர்களின் அலட்சியத்தாலும் மரம் மற்றும் மனித உயிர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில் ' கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக தனியார் சார்பில் சாலையோரத்தில் கேபிள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் ஒருபக்கத்தில் இருந்த அனைத்து மரங்களின் பக்க வேர்களும் வெட்டப்பட்டுள்ளன.

ஆனால் இதுநாள் வரை எந்தவொரு அதிகாரிகளும் ஆய்வு செய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் ரோட்டோரத்தில் இருக்கும் அனைத்தும் மரங்களும் பட்டுப்போகும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை. இனியாவது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்,' என்றனர்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'குடிநீர் வடிகால்வாரியம், நகராட்சி என அனைத்து தரப்பினரும் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டும்போது மரத்தின் வேர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது தனியார் கேபிள் பதிக்கும் பணிகளிலும் மரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாக வந்த புகாரையடுத்து மரங்களுக்கு பாதிப்பில்லாமல் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஒருமரம் சாய்ந்ததையடுத்து ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X