மெல்ல மறைந்து வரும் நெமிலிச்சேரி ஏரி:கட்டட கழிவை கொட்டி ஆக்கிரமிப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

06 மார்
2017
01:43
பதிவு செய்த நாள்
மார் 06,2017 00:43

பல்லாவரம்;பல்லாவரம் நெமிலிச்சேரி ஏரி, மெல்ல மெல்ல மாயமாகி வருகிறது. ஏரியில் கட்டட கழிவை கொட்டி, வாகன நிறுத்தமாக மாற்றும் செயலில், சமூக விரோத கும்பல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.


பல்லாவரத்தை அடுத்த ஜமீன் ராயப்பேட்டையில், நெமிலிச்சேரி ஏரி உள்ளது. குரோம்பேட்டை பாரதிபுரம் முதல் அஸ்தினாபுரம் நேதாஜி நகர் வரை, பரந்து விரிந்து காணப்பட்ட இந்த ஏரி, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.


ஒரு காலத்தில், இந்த ஏரியை நம்பி விவசாயம் நடந்தது. பின், காலப்போக்கில் குடியிருப்புகளின் அதிகரிப்பால், விவசாயம் தடைப்பட்டு, நிலத்தடி நீருக்கு மட்டுமே பயன்பட்டது. இதை சாதகமாக்கி கொண்ட அரசியல்வாதிகள், ஏரியை ஆக்கிரமித்து, 'பிளாட்' போட்டு விற்பனை

செய்தனர்.


தற்போது, சுருங்கி குட்டை போலாகி விட்டது. மேலும், ஆகாயத் தாமரை செடிகள் வளர்ந்து, ஏரி ஒன்று இருப்பதே தெரியாத அளவிற்கு மாறிவிட்டது. கழிவு நீரும் கலப்பதால், நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதோடு, நிலத்தடி நீரும் மாசடைந்து விட்டது.


மற்றொரு புறம், கட்டட கழிவை கொட்டி, ஏரியை ஆக்கிரமிக்கும் செயலும் அதிகரித்துள்ளது. ஜமீன் ராயப்பேட்டை பகுதியில், ஏரி கரையில், கட்டட கழிவை கொட்டி சமப்படுத்தி, வாகன நிறுத்தமாக மாற்றி வருகின்றனர். ஒரு பகுதியில், மரக்கிளைகளை கொட்டியுள்ளனர். இதற்கு எதிர்புறத்தில், கட்டடங்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.


ஜமீன் ராயப்பேட்டையில், சிறிய நீர்நிலைகளும் இருந்தன. காலப்போக்கில், அவை மாயமாகி விட்டன. தற்போது, நெமிலிச்சேரி, பொத்தேரி ஏரி மட்டுமே உள்ளன. அவையும், குட்டையாக மாறி வருவது வேதனை அளிக்கிறது. இதற்கு, உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவு தான் முக்கிய காரணம். எந்த அரசு துறை அதிகாரிகளும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அதற்கு, கையூட்டு பெறுவதும், அரசியல்வாதிகள் மீதுள்ள பயமும் தான் காரணம். இந்த ஏரிகளையும் இழந்து விட்டால், எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்னையால், நம் சந்ததியினர் கஷ்டப்படுவர். இனியாவது, அதிகாரிகள், சமூக நலனில் அக்கறை கொண்டு, இருக்கும்

ஏரியையாவது காப்பாற்றி, பராமரிக்க வேண்டும்.பகுதி மக்கள்

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh - vadodara,இந்தியா
08-மார்-201711:33:41 IST Report Abuse
suresh Lakes in around nemilicherry getting occupied and damaged by slowly becoming dumping yard.The ground water is also vastly getting depleted because of drawl of ground water from this area.If we continue damage to area slowly ground water will deplete fast.Also in and around nemilicherry and royapettah area there are many places where Karuvela maram ( trees ) are grown in abundant quantity.Authority should check and impliment programmes for eradication of such tree to resume ground water in this area.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
08-மார்-201709:20:10 IST Report Abuse
Srinivasan Kannaiya ஐயா...தாயீ... பின்வரும் சந்ததியர்களுக்காக வேணும் நெமிலிச்சேரி ஏரியை காப்பாற்றுங்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X