உல்லாசமாக இருந்த மனைவி, கள்ளக்காதலனை தாக்கி வீட்டை பூட்டி சிறை வைத்தார் கணவர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2017
00:12

திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே, கள்ளக் காதலனுடன் மனைவி உல்லாசமாக இருந்ததை படம் பிடித்த கணவர், அவர்களை தாக்கி, வீட்டை பூட்டி, இரண்டு நாட்கள் சிறை வைத்தார்.

வேலுார் மாவட்டம், திருப்பத்துார் அடுத்த வீரபள்ளி குப்புசாமி வட்டத்தை சேர்ந்தவர் பூபதி, 35; கூலித் தொழிலாளி. இவர் மனைவி குப்பு, 32. இவர்களுக்கு திருமணமாகி, 17 ஆண்டு ஆகிறது. மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். பூபதி தினமும் குடித்து விட்டு வந்ததால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், கடந்த, ஓராண்டுக்கு முன் கணவரை விட்டு பிரிந்து, நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டையில், வாடகை வீட்டில் குப்பு தனியாக வசித்து வந்தார். அப்போது, நாட்றம்பள்ளி அடுத்த முத்தாகவுண்டனுார் வட்டத்தை சேர்ந்த சிவக்குமார், 24, என்பவருடன் குப்புவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த பூபதி, மனைவி குப்புவை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் கள்ளக் காதலை தொடர்ந்தார். இவர்களை கையும், களவுமாக பிடிக்க பூபதி திட்டமிட்டார். இதற்காக குப்பு வீட்டுக்கு சிவக்குமார் எப்போதெல்லாம் வருகிறார் என்பதை அவர்

கண்காணித்தார்.

கடந்த, 7 இரவு, 10:00 மணிக்கு குப்பு வீட்டுக்கு சிவக்குமார் வந்தார். அங்கு, இருவரும் உல்லாசமாக இருந்தனர். அப்போது வீட்டுக்குள் மெதுவாக புகுந்த பூபதி, இருவரும் உல்லாசம் அனுபவிப்பதை தன் மொபைல்போனில் படம் பிடித்தார். பின், அவர்களை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் அவர்கள் மயக்கம் அடைந்தனர். பின் வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே சென்று விட்டார். குப்புவும், சிவக்குமாரும், இரண்டு நாட்களாக வீட்டில் சிறைபட்டிருக்கும் விபரத்தை, நண்பர்களுக்கு மொபைல் மூலம் தகவல் தெரிவித்தனர். நேற்று பகல், 12:00 மணிக்கு தகவலறிந்து வந்த நாட்றம்பள்ளி போலீசார், வீட்டு கதவை உடைத்து, இருவரையும் மீட்டனர்.

இதுகுறித்து குப்பு கொடுத்த புகாரின்படி, நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, பூபதியை நேற்று மாலை கைது செய்து, அவர் படம் எடுத்த மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் வேலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X