அவிநாசி : "குளம் காக்கும் இயக்கம்' சார்பில், சங்கமாங்குளத்தில் சீமை கருவேல மரங்கள் அழிக்கும் பணி நேற்று துவங்கியது. அதேபோல் நீர் வழித்தடமும் தூர்வாரப்படுகிறது.
சுற்றுப்புறச்சூழல் விஷயத்தில், இளைஞர்களின் ஆர்வம் அதிகரித்து கொண்டே செல்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், "வெற்றி' அமைப்பின், அதி தீவிர முயற்சியால், "வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் 3.65 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்படுகிறது. இதன் தாக்கமாக, பல பகுதிகளிம் இளைஞர்கள் ஒன்றிøந்து பசுமை பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அவ்வகையில், அவிநாசியை சேர்ந்த இளைஞர்கள், தன்னார்வ சேவை அமைப்பினர் இøந்து, "குளம் காக்கும் இயக்கம்' என்ற அமைப்பை துவக்கினர். வட்டாரத்திள்ள குளங்கள், வழங்கு வாய்க்கால், நல்லாறு ஆகியவற்றை பாதுகாக்க, அந்த அமைப்பு உறுதியேற்றுள்ளது. சீமை கருவேல மரங்களை அழித்து, நீராதாரங்களை காக்கும் பணி நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் வரலாற்றில் தொடர்புடைய, தாமரைக்குளத்தில் காடுபோல் வளர்ந்திருந்த, முட்செடிகள் அகற்றும் பணி, தற்போது முடிக்கப்பட்டு, குளம் அழகாகி உள்ளது. அதில், இரண்டாவது திட்டமாக, 240 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள சங்கமாங்குளம் தூர்வாரும் பணி கையில் எடுக்கப்பட்டுள்ளது.இதற்கான துவக்க விழா, குளத்துக்குள் நேற்று, கபதி ஹோமத்துடன் துவங்கியது. கலெக்டர் ஜெயந்தி, சீமை கருவேல மரம் அகற்றும் பணிகளை துவக்கி வைத்தார். தினமும், ஒன்பது "பொக்லைன்' வாகனங்கள், தொடர்ந்து இயக்கப்பட்டு, முட்செடி மற்றும் மரங்களை வேருடன் அகற்றி, குளத்தை தூர்வாரி சுத்தம் செய்யப்படும். குளத்துக்கான நீர் வரத்துள்ள வழங்கு வாய்க்கால்களும் இதேபோல் புனரமைக்கப்பட உள்ளது.
நேற்றைய நிகழ்வில், இந்திய தொழில் கூட்டமைப்பின், திருப்பூர் மாவட்ட தலைவர் "மெஜஸ்டிக்' கந்தசாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம், "ஆம்ஸ்ட்ராங்' பழனிசாமி, எஸ்.பி.,அப்பேரல்ஸ் சுந்தரராஜன், "ராம்ராஜ் காட்டன்' நாகராஜ், முன்னாள் ஐ.ஜி., சிதம்பரசாமி, "சைமா' தலைவர் ஈஸ்வரன், எஸ்.ஆர்.ஜி., அப்பேரல்ஸ் கோவிந்தராஜ், "டி-செட்' உறுப்பினர் உள்பட பலர் பங்கேற்றனர்.
குளம் காக்கும் இயக்கத்தினர் கூறுகையில், "தாமரைக்குளம், சங்கமாங்குளம் உள்பட அவிநாசி வட்டாரத்திள்ள குளங்கள் மற்றும் வழங்கு வாய்க்கால் தூர்வாருதல் பணிகளை படிப்படியாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அதே நேரம், அனைத்து சீமை கருவேல மரங்களை, வேருடன் அகற்றப்படும்,' என்றனர்.