என்.எச்., ஆகிறது அவிநாசிபாளையம்-ஒட்டன்சத்திரம் ரோடு: விரைவில் அறிவிப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

21 ஏப்
2017
10:01
பதிவு செய்த நாள்
ஏப் 21,2017 02:14

திருப்பூர்:திருப்பூர் - ஒட்டன்சத்திரம் ரோடு, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளன; இதற்கான, கருத்துரு மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டள்ளது. இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகவுள்ளது.


திருப்பூர்- தாராபுரம்- ஒட்டன்சத்திரம் ரோடு, மாநில நெடுஞ்சாலை (எஸ்.எச்.,37) ஆக உள்ளது. பின்னலாடை தொழில் வளர்ச்சி காரணமாக, தென் மாவட்ட மக்கள் அதிகளவு வருகின்றனர். உற்பத்தியாகும் ஆடைகளும், துறைமுகங்களுக்கு சரக்கு வாகனங்கள் மூலம் செல்கிறது. இதனால், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள ரோடாக, இது உள்ளது.

இதில், அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரையிலான, 32.8 கி.மீ.,தூரம் ரோடு, தேசிய நெடுஞ்சாலையாக (என்.எச்.,381) ஆக மாற்றப்பட்டுள்ளது. 167 கோடி ரூபாய் செலவில், தற்போது ரோடு அகலப்படுத்தப்பட்டு வருகிறது. அவிநாசிபாளையம் முதல் ஒட்டன்சத்திரம் வரை, 68.90 கி.மீ.,தூரம் ரோடு, மாநில நெடுஞ்சாலையாகவே உள்ளது.


இரு வழிச்சாலையாக உள்ள இந்த ரோட்டை, நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு, சாலை மேம்பாட்டு திட்டம் பணி நடந்து வருகிறது. ரோடு விரிவாக்கத்துக்கான ஆய்வு, நிலம் எடுப்பு, சர்வே, நில ஆர்ஜித இழப்பீடு தொகை நிர்ணயித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், அவிநாசிபாளையம் முதல், ஒட்டன்சத்திரம் வரை, மீதமுள்ள ரோட்டையும், தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டு, அதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய, மாநில அரசுகளுக்கு, கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில், தேசிய நெடுஞ்சாலையாக மாற்றி, அறிவிப்பு வெளியாகும் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:அவிநாசி- அவிநாசிபாளையம் வரை ரோடு, தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. ஒட்டன்சத்திரம் வரை உள்ள ரோட்டையும், இத்துடன் இணைக்க பணி நடந்து வருகிறது. மாநில நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கருத்துரு தயாரித்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நான்கு மாதத்தில் அறிவிப்பு வெளியாகலாம்.இதன் மூலம், கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலை, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கோவை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில், அவிநாசிபாளையம் முதல், ஒட்டன்சத்திரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை ரோடு, குறுக்காக இணையும், என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Navaneetha krishnan - Vedasandur,இந்தியா
21-ஏப்-201709:30:24 IST Report Abuse
Navaneetha krishnan போக்குவரத்து அதிகம் உள்ள ரோடு , கண்டிப்பாக நான்கு வழிச்சாலை வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X