1,000 ஆண்டு பழமையான மஹாவீரர் கற்சிலை கண்டெடுப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2017
09:32

வேலூர்: காவேரிபாக்கம் அருகே, நிலத்தை சமன் செய்த போது, மூன்றடி உயரமுள்ள மஹாவீரர் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.


வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த, துரைபெரும்பாக்கம் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில், சென்னையைச் சேர்ந்த பிரேமாவதி என்பவருக்கு சொந்தமான, இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை நேற்று முன்தினம், பொக்லைன் இயந்திரம் மூலம் சமன் செய்த போது, ஐந்து அடி ஆழத்தில் புதைந்திருந்த மஹாவீரர் சிலை கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்த நெமிலி தாசில்தார் பாஸ்கரன், சிலையை கைப்பற்றி, மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியாளர் சரவணன் ஆய்வுக்கு அனுப்பினார்.


ஆய்வுக்கு பின், நேற்று நிருபர்களிடம் சரவணன் கூறியது: பல்லவர், சோழர் காலத்தில், சமண மதத்தைச் சேர்ந்தவர்கள், வேலூர் மாவட்டத்தில் அதிகளவு வாழ்ந்துள்ளனர். இதனால், இதுவரை சமண மதத்தைச் சேர்ந்த, எட்டு தீர்த்தங்கரர்களின் கற்சிலைகள், பல காலகட்டத்தில் பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு, வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. துரைபெரும்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட மஹாவீரர் சிலை, ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. கற்சிலையின் உயரம், மூன்று அடியாக உள்ளது. கலெக்டரின் ஒப்புதலுக்கு பின், அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X