விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த கார்மாங்குடி தொடக்க வேளாண்மை வங்கியில் தமிழ்நாடு அரசின் பிற்பட்டோர் நலத்துறையின் சலுகை வட்டி திட்டத்தின் கீழ் கறவை மாடு கடன் வழங்கும் விழா நடந்தது. அறங்காவலர் குழுத் தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். கூட்டுறவு கடன் சங்க செயலர் தட்சணாமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்க தனி அலுவலர் சாய்ராமன் வரவேற்றார். ஊராட்சி தலைவர் ஜெயலட்சமி 14 பயனாளிகளுக்கு கறவை மாடுகளை வழங்கினார். உழவர் மன்ற தலைவர் வெங்கடேசன், உறுப்பினர்கள் நாகராஜ், தினேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.