அடையாற்றை மேம்படுத்தும் பணியில் முறைகேடு ; ஆற்று மணல், மண் 'மாபியா' கும்பலுக்கு விற்பனை?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மே
2017
05:41

அடையாறு ஆறு, அதை ஒட்டியுள்ள ஓடைகளை மேம்படுத்தும் பணியில் பொதுப்பணித் துறை

அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. ஓடைகளில் எடுக்கப்படும் மணல், ஆற்றை துார்வாருவதன் மூலம் கிடைக்கும் மண் ஆகியவற்றை, எந்த அனுமதியும் இல்லாமல், 'மாபியா' கும்பலுக்கு விற்பனை செய்வதாக சர்ச்சை வெடித்துள்ளது.



ஆதனுார் முதல் மணப்பாக்கம் வரை, அடையாறு ஆறு, 19 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படுகிறது. இதற்கான பணிகள், கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்து வருகின்றன. மணிமங்கலம் ஏரி உபரிநீர் வரும் கால்வாய், ஒரத்துார் ஓடை, கிஷ்கிந்தா கால்வாய் ஆகியவை துார்வாரப்பட்டு வருகின்றன.



ஆதனுாரில் அடையாறு ஆறும் துார்வாரப்படுகிறது. இந்த மேம்பாட்டு திட்டத்தில், ஆற்றை துார்வாருவதால் கிடைக்கும் மண் கரைகள் அமைக்கப்பட்டது போக, மீதமுள்ள மண், மணல் ஆகியவை, அரசுக்கு சொந்தமான இடங்களிலோ, கல்குவாரி குட்டைகளிலோ கொட்டப்பட வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது.



மணல் குவாரிகள்:


இந்த மண், மணலை விற்பனை செய்ய, கனிம வளத் துறையிடமோ, மாவட்ட நிர்வாகத்திடமோ எந்த அனுமதியும் பெறவில்லை. ஆனால், சில வாரங்களாக, அடையாற்றை மேம்படுத்தும் பணியின் மூலம் கிடைக்கும் மணல், மண் ஆகியவற்றை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறைகேடாக விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.



இதற்கு ஆதனுார் பகுதிவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். கோட்டாட்சியர் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி, ஆற்று மண்ணை குவாரிகளில் கொட்ட எச்சரித்ததாக தெரிகிறது.



பதுக்கி விற்பனை :


இருப்பினும், கள்ளத்தனமாக ஆற்று மண், ஒரத்துார் ஓடையில் கிடைக்கும் கட்டுமான பணிக்கு உகந்த மணல் ஆகியவை, மணல் மாபியா கும்பலுக்கு விற்பனை செய்யப்படுகிறது.



இது குறித்து ஆதனுார் பகுதிவாசிகள் கூறியதாவது: ஒரத்துார் ஓடையில் மணல் அதிகமாக உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டால், இந்த மணலுக்கு கிராக்கி உள்ளது.



விரைவில் போராட்டம்:


இந்த மணலும், அடையாறு ஆற்றை துார்வாருவதன் மூலம் கிடைக்கும் மண்ணும், திருநீர்மலை அருகே, சேகர் ரெட்டி கும்பலுக்கு நெருக்கமான மணல் மாபியா ஒருவருக்கு சொந்தமான தனியார் இடத்தில் பதுக்கி, அங்கிருந்து விற்பனை செய்யப்படுகிறது.



கிஷ்கிந்தா ஓடையிலும், புலிக்கொரடு அருகே அடையாறு ஆற்றில் கிடைக்கும் கறுப்பு மண்ணும் மட்டுமே கணக்கு காண்பிக்க, கல்குவாரி குட்டையில் கொட்டி நிரப்பப்படுகிறது. இதற்கான புகைப்பட ஆதாரம் எங்களிடம் உள்ளது. மாவட்ட அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுப்பணித் துறை அதிகாரிகளை கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.



கண்காணிக்க உத்தரவு:


அடையாறு சீரமைப்பு பணியில் முறைகேடு நடப்பதாக, பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, இப்பணிகளை ஆய்வு செய்யவும், ஒப்பந்ததாரருக்கு பட்டுவாடா செய்யும் முன், தலைமை பொறியாளரிடம் பணிகளை ஆய்வு செய்த அறிக்கையை அளித்து, ஒப்புதல் பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், இப்பணியின் தரம் குறித்தும், ஒப்பந்த சரத்துக்களை மீறி மண் விற்பனை செய்யப்படுவது குறித்து, ஆதாரங்களுடன் முதல்வரிடம் புகார் அளிக்க, ஆதனுார் பகுதிவாசிகள் முடிவு செய்துள்ளனர்.



தடுப்பணை திட்டம் என்னாச்சு?


அடையாறு ஆறு, 50க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரிநீரை கடத்தும் பணியை செய்கிறது. இந்த ஆற்றில் கட்டப்பட்ட, இரண்டு தடுப்பணைகளில் ஒன்று விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்டது.


மண்ணிவாக்கம், வரதராஜபுரம், திருநீர்மலை ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டுவது குறித்து, 10 ஆண்டுகளாக அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆனால், இன்னும் தடுப்பணை எதுவும் கட்டப்படவில்லை. தற்போது கூட வெள்ளம் ஏற்படாமல், மழைநீர் கடலுக்கு செல்ல வழிவகை செய்யவே, 19 கோடி ரூபாய் செலவிடப்படுகிறதே தவிர, சில லட்சங்கள் கூட, தடுப்பணை கட்டும் பணிக்காக ஒதுக்கப்படவில்லை.



- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Aruna - Trichy,இந்தியா
31-மே-201709:29:44 IST Report Abuse
S.Aruna தெரிந்தே நடத்தப்படும் தப்புகள். சட்டத்தில் அனைத்துத்துறைகளின் தேவையறிந்து ஓட்டைகள் விடப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்து இயற்கைவளம் கொள்ளையடிக்கப்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Navaneetha krishnan - Vedasandur,இந்தியா
31-மே-201709:26:59 IST Report Abuse
Navaneetha krishnan அதிகாரிகள் , பெயரிலேயே அதிகாரம், ஊழல் லஞ்சம் செய்யும் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்தால் மட்டுமே நாடு உருப்படும்.
Rate this:
Share this comment
Cancel
Raamji - chennai,இந்தியா
31-மே-201708:12:03 IST Report Abuse
Raamji தடுப்பணை கட்டும் பணிக்காக ஒதுக்கப்படவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X