கார்த்திகை தீபம்: உயர்நீதிமன்றம் உத்தரவு | மதுரை செய்திகள் | Dinamalar
கார்த்திகை தீபம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
Added : ஆக 01, 2017 | |
Advertisement
 

மதுரை:அகில பாரத இந்து மகா சபா துணைத் தலைவர் கணேசன். இவர்,'கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, திருப்பரங்குன்றம் மலை குதிரை சுனை திட்டு பகுதியில், தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். போலீசார் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார். தனிநீதிபதி 2014ல் தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து கணேசன் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அமர்வு உத்தரவு: சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் துணை கமிஷனர், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுவை பைசல் செய்கிறோம்

என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X