| பெண்ணுக்கு 'வாட்ஸ்ஆப்'பில் ஆபாச தகவல்கள்: பாதிரியார் சஸ்பெண்ட் Dinamalar
பெண்ணுக்கு 'வாட்ஸ்ஆப்'பில் ஆபாச தகவல்கள்: பாதிரியார் சஸ்பெண்ட்
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 டிச
2017
23:58

துாத்துக்குடி:சர்ச்சுக்கு வரும் பெண்ணுக்கு வாட்ஸ்ஆப்'பில் ஆபாச தகவல்கள் அனுப்பி அழைப்பு விடுத்த பாதிரியார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


துாத்துக்குடி மாவட்டம், நாசேரத் சி.எஸ்.ஐ., திருமண்டலத்திற்குட்பட்ட சண்முகபுரம் துாய பேதுரு ஆலய சேகரகுரு பாதிரியார் செல்வின்துரை 50.இவர் சர்ச்சுக்கு வழக்கமாக வரும் ஒரு பெண்ணிடம் அலைபேசி எண் வாங்கியுள்ளார். பின்னர் அவருக்கு 'வாட்ஸ்ஆப்'பில், ஆபாச தகவல்கள் அனுப்பி அழைப்பு விடுத்துள்ளார்.இது குறித்து அந்த பெண் சபை நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தார். அதன் பேரில் நிர்வாகிகள் விசாரித்தனர்.


செல்வின்துரை பெண்ணுக்கு ஆபாசமான தகவல்கள் அனுப்பியதைஒப்புக்கொண்டார். இதையடுத்து செல்வின்துரையை சஸ்பெண்ட் செய்தும், சர்ச்சுக்கு சொந்தமான வீட்டை விட்டு வெளியேறவும் உத்தரவிட்டனர்.இவர் ஏற்கனவே துாத்துக்குடி மாவட்டம், வடக்கூர் பேட்ரிக் சர்ச், டூவிபுரம் சர்ச்சில் சபை மக்களால் புகார் அளிக்கப்பட்டு மாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


சபையில் இருந்து சஸ்பெண்ட் என்பது வெறும் கண்துடைப்பு, அவர் மீது போலீசில் புகார் அளித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்தால்தான், இனி இத்தகைய நடவடிக்கை தொடராது என சபை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X