துரு பிடித்து நிற்கும் அரசு வாகனங்கள்: ஏலம் விடாததால் வருவாய் இழப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2018
07:42

வேலூர்: வேலூர் மாவட்டத்தில், ஏலம் விடாமல், துரு பிடித்துப்போய் நிற்கும் அரசு வாகனங்களால், அரசுக்கு, லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் ஜீப், டிரக்கர் போன்ற வாகனங்கள், ஐந்து ஆண்டுகள் ஆனால், அடிக்கடி ரிப்பேர் ஆகி விடுகின்றன. இதனால், இந்த வாகனங்கள் ஓட லாயக்கற்றது என, அரசு வாகன பணிமனையில் சான்றிதழ் பெற்று, ஓரம் கட்டி விடுகின்றனர். இந்த வாகனங்களை ஏலம் விட அனுமதி கேட்டு, தங்கள் துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்புகின்றனர். ஆனால், இந்த கடிதங்களை உயர் அதிகாரிகள் பார்க்க நேரம் இல்லாததால், கிடப்பில் போடப்படுகின்றன. இதனால் பழுதான அரசு வாகனங்கள், துரு பிடித்த நிலையில் அந்தந்த அலுவலகங்கள் முன் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, வேலூர் மாவட்ட அரசு வாகன ஓட்டுனர்கள் சங்கத்தினர் கூறியதாவது: அரசு ஜீப், டிரக் போன்ற வாகனங்கள், 20 ஆயிரம் கி.மீ., தூரம் ஓடிய பின், அடிக்கடி பழுதாவதால், கண்டம் சான்றிதழ் பெற்று, அலுவலகங்களில் நிறுத்தப்படுகின்றன. இவற்றை உடனுக்குடன் ஏலம் விட்டால், கணிசமான ரூபாய் அரசுக்கு கிடைக்கும். ஆனால், துரு பிடித்த நிலையில் ஏலம் விட்டால், யாரும் எடுக்க முன்வருவதில்லை. ஒரு டிரக்கரை, 1,000 அல்லது 2,000 ரூபாய் விலைக்கு கேட்கின்றனர். இந்தளவு குறைந்த விலைக்கு விற்க முடியாது. இதனால், வேலூர் மாவட்டத்தில் மட்டும், 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள், அந்தந்த அரசு அலுவலகங்களில் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு, துரு பிடித்துப் போய் உள்ளன. இதனால், அரசுக்கு லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் வேலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X