| நிரம்பி வழியும் குப்பை தொட்டி: கண்டு கொள்ளாத மாநகராட்சி Dinamalar
நிரம்பி வழியும் குப்பை தொட்டி: கண்டு கொள்ளாத மாநகராட்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 ஜன
2018
07:42

வேலூர்: வேலூரில், எவர்சில்வர் குப்பை தொட்டியில் போடப்படும் குப்பையை ஊழியர்கள் அகற்றாததால், காட்சிப்பொருளாக மாறியுள்ளது.

வேலூர் மாநகராட்சியில், 60 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட், பஸ் நிறுத்தம், மார்க்கெட், பூங்கா ஆகிய மக்கள் நடமாட்டம் அதிமுள்ள பகுதிகளில், பொது மக்கள் குப்பையை வீசி விட்டுச் செல்கின்றனர். இதனால், வேலூர் மாநகராட்சியில், எங்கு பார்த்தாலும் குப்பையாக காட்சியளித்தது. இதனால் குப்பையை சேகரிக்க, அரசு சார்பில், 20 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. இந்த நிதியில் இருந்து, ஒரு குப்பை தொட்டி, 10 ஆயிரம் ரூபாய் என்ற மதிப்பில், 60 வார்டுகளுக்கு, 200 எவர்சில்வர் குப்பை தொட்டிகள் வாங்கப்பட்டன. இவை, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில், கடந்தாண்டு ஜன., மாதம் வைக்கப்பட்டன. ஆனால், இந்த குப்பை தொட்டியில் போடப்படும் குப்பையை மாநகராட்சி ஊழியர்கள் எடுப்பதில்லை. இதனால் பல மாதங்களாக இதில் குப்பை சேர்ந்து, நிரம்பி வழிவதோடு, குப்பை காற்றில் பறந்து வருகின்றன. பொதுமக்களும் தொடர்ந்து இங்கேயே குப்பையை போட்டு விட்டுச் செல்கின்றனர். குப்பை அகற்றப்படாததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அந்த பகுதி நோய்களை பரப்பும் இடமாக மாறி விட்டன. இதனால், குப்பை கொட்டுவதற்காக தொட்டி வைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாமல், அரசு வழங்கிய, 20 லட்சம் ரூபாய் வீணாகியுள்ளது. எனவே, இந்த சில்வர் குப்பை தொட்டியில் சேரும் குப்பையை, இனிமேலாவது மாநகராட்சி ஊழியர்கள் அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X