இளம்பெண்ணை ஏமாற்றி திருமணத்திற்கு மறுத்த வாலிபர் உட்பட 6 பேர் மீது வழக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2018
09:56

வேலூர்: வேலூர் அருகே, இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து, திருமணத்திற்கு மறுத்த வாலிபர் உட்பட, ஆறு பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரண்யா, 25; இவர், திருப்பூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார், 27; கட்டட மேஸ்திரியாக உள்ளார். இவருக்கும், சரண்யாவுக்கும் இடையே, ஓராண்டுக்கு முன் காதல் ஏற்பட்டது. இதில், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். அப்போது, திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவருடன், தினேஷ்குமார் உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில், தினேஷ்குமாருக்கு, அவரது பெற்றோர், வேறு இடத்தில் பெண் பார்த்தனர். இதையறிந்த சரண்யா, இதுகுறித்து அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு, சரண்யாவை திருமணம் செய்துகொள்ள தினேஷ்குமார் மறுத்தார். இந்நிலையில், அவருக்கு, வேறு ஒரு பெண்ணுடன், கடந்த சில தினங்களுக்கு முன், திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையறிந்த சரண்யா, ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது குறித்து விசாரித்து, தினேஷ்குமார், அவரது தந்தை தேவேந்திரன், தாய் ராணி, பெரியம்மா லாவண்யா, உறவினர்கள், ரவி, கலா, ஆகிய, ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X