'நீரா' இறக்கிய விவசாயிகள் மீது வழக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2018
21:11

திருப்பூர் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில், நீரா இறக்கிய விவசாயிகள் மீது, தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கியதாக, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
காங்கயத்தை அடுத்த குருக்கபாளையத்தை சேர்ந்த நல்லமுத்து, 58; இவர், தனது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களில் கள் இறக்கியதாக, ஊதியூர் போலீசார், வழக்கு பதிவு செய்தனர். மரங்களில் கட்டியிருந்த பானைகளை, போலீசார் உடைத்தெறிந்தனர். சடையபாளையத்தை சேர்ந்த, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க வட்டார தலைவர் ஈஸ்வர மூர்த்தி, 48, மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அங்கிருந்த பானைகள் உடைக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் மீண்டும் அங்கு போலீசார் சோதனை செய்து, 12 மரங்களில் இருந்த பானைகளை உடைத்து, அங்கிருந்த ஊழியர் சோமசுந்தரம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர். நிழலி, குருக்கபாளையத்தில் நல்லதம்பி, 50, என்பவரின் தோப்பில், முருகன், 50 என்பவரை கைது செய்தனர்.
அதேபோல், மங்கலம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கள்ளப்பாளையம் பகுதியில், நான்கு தோட்டங்களில் போலீசார், கள் இறக்கியதாக விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்தனர். அங்கு, வாகனங்களில் வந்த போலீசார், தோட்டங்களிலும், தென்னை மரங்களிலும் இருந்த பானைகளை உடைத்தெறிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் கூறுகையில், 'தென்னை மரத்தில் நீரா இறக்க அரசு அனுமதித்துள்ளது. அதன்படி வழக்கம் போல், பதநீர் இறக்கிய தோட்டங்களில் போலீசார், கள் இறக்கியதாகக்கூறி வழக்கு பதிவு செய்துள்ளனர். கள் இறக்கினால், வழக்கு போட்டு பறிமுதல் செய்ய வேண்டும். மாறாக, பொருட்களை போலீசார் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்,' என்றனர்.- நமது நிருபர் --

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X