ரூ.800 லஞ்சம்: விஏஓவுக்கு 7 ஆண்டு சிறை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

27 பிப்
2018
13:08
பதிவு செய்த நாள்
பிப் 27,2018 13:03

பெரம்பலூர்: அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் அருகே முனியங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பரமசிவம் என்பவர் உள்ளிட்ட 4 பேர் மீது விக்கிரமங்கலம் போலீசார் இடம் தொடர்பாக கடந்த 2004 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இதற்காக ஜாமீன் எடுக்க, ரெட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் நாராயணன் அத்தாட்சி சான்றிதழ் தர 800 ரூபாய் பரமசிவத்திடம் லஞ்சம் வாங்கினார். அப்போது அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் நாராயணனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 16 ஆயிரம் ரூபாயும் அபராதமும் விதித்து அரியலூர் முதன்மை குற்றவியல் நிதிமன்ற நீதிபதி ரவி உத்தரவு பிறப்பித்தார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
27-பிப்-201818:05:39 IST Report Abuse
S.Baliah Seer அந்த காலத்தில் மணியக்காரர், கணக்குப்பிள்ளைகள் லஞ்சம் வாங்கியதாக சரித்திரம் இல்லை.அவர்கள் எல்லாம் பரம்பரை பரம்பரையாக ஒரு கவுரத்திற்காக அந்த பதவிக்கு வந்தவர்கள்.ஏழை எளியவர்கள் கிஸ்தியை தாங்களே ஏற்றுக்கொண்டவர்கள்.ஆயினும் அக்காலத்தில் கூட அவர்களுக்கு மேலிருந்த RI -கள் பணம் வாங்கிக்கொண்டுதான் வருமானவரி சான்றிதழ் வழங்க தாசில்தார் அலுவலகத்துக்கு பரிந்துரை செய்வார்கள்.என்ன...அந்த ஒரிஜினல் மணியக்காரருக்கு பதிலாக வந்த VAO -க்கள் RI -மட்டும் வாங்கலாம் நாம் வாங்க கூடாதா என்று வாங்குவது வழக்கமாகி விட்டது.இப்படி பிடிப்பதென்றால் தமிழ் நாட்டில் எல்லா VAO -வையும் பிடிக்க வேண்டும்.வேறு ஏதோ காரணத்துக்காக அவரை இதன் மூலம் பழி வாங்கி விட்டார்கள் என்றே தோன்றுகிறது.ஆயினும் 800 ரூபாய்க்கு ஏழு -வருடம் சிறை ...அதுவும் ஊழல் தமிழ் நாட்டில்...
Rate this:
Cancel
N S Sankaran - Chennai,இந்தியா
27-பிப்-201816:31:10 IST Report Abuse
N S Sankaran சபாஷ் 700 ரூபாய் லஞ்சத்துக்கு ஏழு வருடம். 4000 கோடி கொள்ளையடிச்ச சசிகலாவுக்கு நாலு வருஷம். நீதிக்கு பூஜ்யத்துக்கு மதிப்பில்லை என்ற எண்ணம் போலும்.
Rate this:
Adhvikaa Adhvikaa - chennai,இந்தியா
27-பிப்-201819:20:18 IST Report Abuse
Adhvikaa Adhvikaaஐநூறு ரூபாய் லஞ்சம் வாங்கிய ஒரு வருவாய்த்துறை ஊழியருக்கும் இதே பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஏழு வருடம் சிறைத்தண்டனை. ஒரே நகைச்சுவை தான். பல கோடி திருடிய பக்கா திருடர்கள் விஞ்ஞான பூர்வமாக திருடியதால் தப்பித்துக்கொள்கிறார்கள். இது மாதிரி ஐநூறு ரூபாய் அல்லது ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அறிவிலிகள் ஏழுவருடம் சிறையில் கழிக்கவேண்டும். லஞ்சப்பணத்தை பரி மா ற்ற வழி வகுத்த இத்தாலிய குவாத்ரோச்சிகளுக்கு வட்டியுடன் பணத்தை திருப்பி கொடுத்தார்கள். சட்டம் ஏழைகள் மீது பாயும்.பணக்காரர்களை கண்டாலோ பதுங்கும்....
Rate this:
Cancel
Rajesh Thirupathi - Chennai,இந்தியா
27-பிப்-201814:18:11 IST Report Abuse
Rajesh Thirupathi நல்ல thirupu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X