சென்னை அருகே விரைவில் உருவாகிறது... ‛'மினி ஊட்டி!' 300 வகையான தாவரங்களுடன் மரப்பூங்கா ரம்மியமான சுற்றுலா தலமாகிறது கொளப்பாக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மே
2018
01:52

ஆராய்ச்சி மற்றும் வருங்கால சந்ததி தெரிந்து கொள்ளும் வகையில், மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள, 300 வகையான அரிய தாவரங்களை கொண்டு, வண்டலுாரை அடுத்த கொளப்பாக்கத்தில், ஊட்டி போன்ற சூழலுடன் கூடிய, மரப்பூங்கா அமைக்கும் பணி, வேகமாக நடந்து வருகிறது.

கோடை காலம் வந்தால், சென்னை உள்ளிட்ட தமிழக மக்கள், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.இதற்கு, அங்குள்ள சீதோஷ்ண நிலையுடன், அரிய வகையான தாவரங்களும் ஒரு காரணம். அந்தளவிற்கு பல வகையான தாவரங்களை அங்கு காணமுடியும்.சென்னையில், இந்த தாவரங்களை பார்ப்பது, அரிதான விஷயம். வன ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோர், இந்த தாவரங்களை ஆராய்ச்சி செய்ய, மலை பிரதேசங்களுக்கு தான் செல்ல வேண்டியுள்ளது.

இந்நிலையில், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் வருங்கால சந்ததி தெரிந்து கொள்ளும் வகையில், கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் வளரும், 300 வகையான தாவரங்களை கொண்டு, ஊட்டி போன்ற சூழலுடன் கூடிய மரப்பூங்கா, சென்னை அருகே அமையவுள்ளது.
வண்டலுாரை அடுத்த கொளப்பாக்கத்தில், மாநில வன ஆராய்ச்சி மையம் எதிரே, அத்துறை சார்பில், 20 ஏக்கர் பரப்பளவில், இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 2017 ஏப்ரலில், பூங்கா அமைக்கும் பணி துவங்கியது.

இப்பூங்காவில், கோடை வெயிலை தாங்கக்கூடிய, 200 வகையான தாவரங்கள் நடப்பட்டுள்ளன. தமிழகத்தில், இதுபோன்ற வசதிகளுடன் மரப்பூங்கா அமைக்கப்படுவது என்பது, இதுவே முதல்முறை.

4 தடுப்பணைகள்

வண்டலுார் மலையில் இருந்து வெளியேறும் மழைநீர், மரப்பூங்கா அமையவுள்ள இடத்தை கடந்து, நெடுங்குன்றம் ஏரிக்கு செல்லும். இயற்கையாக செல்லும் இந்த நீரோட்ட பாதையை மறைக்காமல், பூங்காவின் நடுவில், ஆங்கில எழுத்தான, 'யூ' வடிவில், கால்வாய் அமையவுள்ளது.மழைக்காலத்தில், இந்த கால்வாய் வழியாக, ஏரிக்கு நீர் செல்லும். அதேநேரத்தில், கால்வாயில், நான்கு தடுப்பணைகள் கட்டப்பட்டு, தண்ணீரை தேக்கி, பார்வையாளர்களை குஷிப்படுத்தவும், மரங்களுக்கு பாய்ச்சவும் திட்டமிடப்பட்டுள்ளது.

குட்டி தீவு

மரப்பூங்காவின் நடுவில், குட்டி தீவு ஒன்று அமையவுள்ளது. அங்கு, ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள தாவரங்கள் நட்டு வளர்க்கப்படும். அந்த மரங்கள் வளர்ந்தவுடன், அதன் உள்ளே சென்று வரும் போது, ஊட்டி பூங்காவிற்குள் சென்று வந்தது போன்ற, ஒரு சூழலை பார்வையாளர்கள் உணர முடியும்.அதேபோல், தாவரங்களின் செயல் விளக்க கூடம் ஒன்றும் அமையவுள்ளது. அதில், ஒவ்வொரு தாவரம் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இது, ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

மரப்பூங்கா விரைவில் அமைக்கப்பட்டு, மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனுமதி எப்போது?


மரப்பூங்கா குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பல வகையான மரங்கள், அழியும் நிலையில் உள்ளன. நமது சந்ததிக்கு, சில மரங்களின் பெயர்கள் மட்டுமே தெரியும். இந்த மரப்பூங்காவில், 300 வகையைச் சேர்ந்த, 1,500 தாவரங்களை கண்டு ரசிக்கலாம். இதில், கோடையை கருத்தில் கொண்டு, 100 தாவரங்களை தனியாக வைத்து பராமரித்து வருகிறோம்.ஒன்றரை மாதத்தில் பணிகள் முடிந்து விடும். தாவரங்கள் வளர்ந்தவுடன், கல்விக்காகவும், பொதுமக்களின் பார்வைக்கும் திறந்து விடப்படும்.


வரும் காலத்தில், மாணவர்களின் ஆராய்ச்சிக்கு மட்டுமின்றி, அரிய வகை தாவரங்களின் விதைகளை எடுத்து, இன்னும் பல இடங்களில் நட்டு விரிவுப்படுத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

எந்தெந்த தாவரங்கள்!


தமிழகத்தில் ஜவ்வாது மலை, நீலகிரி, பொள்ளாச்சி, கோவை ஆகிய இடங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், தாவரங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
பன்னீர், இரும்பு, ஈட்டி, புன்னை, செண்பகம், எட்டி, வெண்தேக்கு, மயிலடி, மயிர் மாணிக்கம், மலையாத்தி, வேம்பு, பாதிரி, மாவிலங்கம், ருத்திராட்சம், சந்தனம், செம்மரம், வெடிப்பாலா, வில்லம், கடுக்காய், நெல்லி, பலா உள்ளிட்ட மரங்கள், இந்த பூங்காவில் இடம்
பெற்றுள்ளன.

வேங்கு, இலுப்பை, கருங்காலி, கொடுக்காய்ப்புளி, செங்கடம்பு, தவிட்டுக்கொய்யா, தும்புலிமரம், நாவல், நீர்க்கடம்பு, நெட்டிலிங்கம், புலிநகம், பூவரசு, பெருமூங்கில், மகிழ், மஞ்சக்கடம்பு உள்ளிட்ட தாவரங்களையும், இங்கு காணலாம்.


- -நமது நிருபர்- -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selva - CHENNAI,இந்தியா
02-ஜூன்-201815:34:31 IST Report Abuse
Selva நல்ல முயற்சி. வரவேற்கிறோம். மக்களுக்கு உபயோகமா இருந்தால் ஓகே..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
01-ஜூன்-201808:47:06 IST Report Abuse
Srinivasan Kannaiya தேர்தல் செலவிற்கு பணம் பண்ண பார்க்கிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel
kandhan. - chennai,இந்தியா
31-மே-201816:54:42 IST Report Abuse
kandhan. விவசாயத்தை அழித்துவிட்டு மரங்களை கண்காட்சியாக்கும் அரசுக்கு மக்கள் இதை அனுமதிக்கக்கூடாது காரணம் இயற்கையான முறையில் வளரும் மரங்களை காக்காதவறிய அரசை என்ன சொல்வது இதிலும் கொள்ளை அடிக்கவும் அங்கே உருவாகும் சொகுகுபங்களாக்களை விற்கவும் ரியல் எஸ்டேட் முதலாளிகளும் அரசும் சேர்ந்து செய்யும் நூதன கொள்ளைதான் இந்த திட்டம் இது தேவையற்றது விவசாயிகளின் நலனில் அக்கறை இருந்தால் தடுப்பணை கட்டி நீரை தேக்கிவைத்து விவாசாயம் பெறுக அரசு ஆவண செய்யவேண்டும் செய்வீர்களா ???' கந்தன் சென்னை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X