கோவை, மாவட்ட அளவில், சிறுவர்களுக்கான கூடைப்பந்து போட்டியில், சி.எஸ்., அகாடமி அணி, சுகுணா பிப்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
கோவை, ஒய்.எம்.சி.ஏ., கூடைப்பந்து கிளப் சார்பில் '64ம் ஆண்டு வெங்கடகிருஷ்ணன் நினைவு கோப்பை' குட்செட் ரோடு, ஒய்.எம்.சி.ஏ., வளாகத்தில் நடந்து வருகிறது.
மாவட்ட அளவில் 12 வயது 'மினிபாய்ஸ்', 16 வயது ஜூனியர் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என 4 பிரிவுகளில் 80க்கு மேற்பட்ட அணிகள் போட்டியில் பங்கேற்றன.
* 13 வயது மினி பாய்ஸ் பிரிவு: முதல் போட்டியில் சி.எஸ்., அகாடமி அணி, 37-30 என்ற புள்ளி கணக்கில், கே.கே.நாயுடு பள்ளி அணியை வென்றது. சி.எஸ்., அணியில் ஸ்ரீ சிவா- 13; கே.கே.நாயுடு அணியில் சர்வேஷ் - 14 புள்ளிகள் பெற்றனர்.
இரண்டாவது போட்டியில், பாரதி அணி, 70-30 என்ற புள்ளி கணக்கில், பெர்க்ஸ் அணியை வென்றது. பாரதி அணியில், சந்திரகாந்த்- 24; பெர்க்ஸ் அணியில் அபிலாஷ்- 8 புள்ளிகள் பெற்றனர்.
மூன்றாவது போட்டியில், சுகுணா ரிப்ஸ் அணி, 34-33 என்ற புள்ளி கணக்கில், டெக்சிட்டி அணியை வென்றது.
சுகுணா ரிப்ஸ் அணியில், ஆதவன்- 23; டெக்சிட்டி அணியில், கிரோர் கார்த்திக்- 22 புள்ளிகள் பெற்றனர். ஜூனியர் மாணவர்களுக்கான போட்டியில், ஆர்.எல்.எம்.எச்.எஸ்.எஸ்., அணி, மணிஸ் அணிகள் மோதின.
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய, ஆர்.எல்.எம்.எச்.எஸ்.எஸ்., அணி வீரர்கள், 47- 21 என்ற புள்ளி கணக்கில், மணிஸ் அணியை வென்றது. மணிஸ் அணியில் மனோஜ்- 10 புள்ளி
பெற்றார்.