| விளையாட்டு சீசன் துவங்கியாச்சு; மாணவர்கள் குதூகலம் Dinamalar
விளையாட்டு சீசன் துவங்கியாச்சு; மாணவர்கள் குதூகலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2018
23:39

கோவை, கோவை கல்வி மாவட்ட 8 குறுமைய பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது. 14, 17, 19 வயது பிரிவுகளில் மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடக்கின்றன.

கோவை கல்வி மாவட்ட 398 பள்ளிகளை, கோவை-அ, ஆ, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மேட்டுப்பாளையம், சூலுார் என

8 குறுமையங்களாக பிரித்து, கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, வாலிபால், கபடி,

கோ-கோ, மேஜைப்பந்து, டென்னிஸ்,

இறகுப்பந்து, மேஜைப்பந்து, டென்னிகாய்ட் ஆகிய விளையாட்டுகள் நடக்கின்றன.

கோவை-'ஆ'குறுமைய அனைத்து பள்ளி கன்வீனர் டிரினிட்டி கான்வென்ட் பள்ளி சார்பில்,

மாணவர்களுக்கான மேஜைப்பந்து ஒற்றையர் பிரிவு போட்டிகள் ஸ்டேன்ஸ் பள்ளி உள் அரங்கில் நடந்தது.

14 வயது ஒற்றையர் இறுதி போட்டியில், டிரினிட்டி பள்ளி செல்வின் சாமுவேல் 11-7, 12-10, 11-8 புள்ளி கணக்கில் இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி கார்த்திக்கையும்;

17 வயது பிரிவில், இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி அர்ஜூன் ரிஷி 11-8, 11-9, 11-6 புள்ளி கணக்கில் ஸ்டேன்ஸ் பள்ளி சரணையும் வென்றனர்.

ஸ்டேன்ஸ் பள்ளி

உடற்கல்வி இயக்குனர் சண்முகம், டிரினிட்டி பள்ளி உடற்கல்வி

இயக்குனர் காணிக்கைராஜ், கார்மல் கார்டன் பள்ளி உடற்கல்வி

இயக்குனர் பீட்டர் ஆகியோர் போட்டிகளை

நடத்தினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X