| நாய்க்குட்டிக்கு பாலூட்டும் குரங்கு Dinamalar
நாய்க்குட்டிக்கு பாலூட்டும் குரங்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2018
07:17

அரியலூர்: அரியலூர் அருகே, நாய்க்குட்டிக்கு பாலூட்டும் குரங்கை, அப்பகுதி மக்கள், வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர். அரியலூர் மாவட்டம், கூத்தங்குடி கிராமத்தில், சுற்றித்திரியும் குரங்கு ஒன்று, சில நாட்களுக்கு முன், ஒரு குட்டி ஈன்றது. அந்த குட்டி இறந்தே பிறந்தது. இதனால், அதே பகுதியில், தெரு நாய் ஒன்று ஈன்ற குட்டிகளில், ஒரு குட்டியை தூக்கி வைத்துக் கொண்டது. பிறந்து சில நாட்களேயான அந்த நாய்க் குட்டியை, எங்கு சென்றாலும் தூக்கிக் கொண்டே செல்வதுடன், வாஞ்சையுடன் மார்போடு அணைத்து, பாலூட்டுகிறது. மற்ற குரங்குகள், இந்த குரங்குக்கு எவ்வித தொந்தரவும் செய்யாமல், அதனுடனே சுற்றித் திரிகின்றன. வீடுகளின் மேற்கூரை மற்றும் மரக்கிளைகளில் நாய் குட்டியுடன் சுற்றித்திரியும் குரங்கை, பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்துச் செல்கின்றனர்.


 

Advertisement
மேலும் அரியலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X