நெல்லை மாநகரத்தை சூழ்ந்த புகைமண்டலம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2018
12:05

திருநெல்வேலி: நெல்லை அருகே தனியார் காகித ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இரவு முழுவதும் தீ எரிந்து புகை வெளியேறிதால் நெல்லை மாநகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. மாசுகட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் இதனை கண்டுகொள்வதில்லை.திருநெல்வேலி பேட்டையை அடுத்த வடுகன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான காகித ஆலை உள்ளது. இங்கு மூலப்பொருள்களான பழைய காகிதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் தீப்பற்றியது. வேகமாக வீசிய காற்றினால் தீ மளமளவென கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் வெண்புகைமூட்டம் விண்ணை முட்டும் அளவிற்கு சூழ்ந்தது. தகவல் அறிந்த

பேட்டை, நெல்லை. சேரன்மகாதேவி, அம்பை, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஐந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் இன்று காலை வரையிலும் தீ எரிந்தது. சீதபற்பநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கண்டுகொள்ளாத மாசுகட்டுப்பாட்டு வாரியம்


இந்த காகித ஆலை, நெல்லை பேட்டையில் மாசுகட்டுப்பாட்டுவாரிய அலுவலகத்திற்கு அருகில்தான் உள்ளது. ஆனாலும் அங்கு சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவில்லை. நேற்றும் இன்றும் திருநெல்வேலி மாநகரம் முழுவதும் காலையில் பனிமூட்டம் போல புகைமூட்டம் காணப்பட்டது. பொதுமக்களுக்கு மூச்சுதிணறலும், கண்எரி்ச்சலும் ஏற்பட்டது. ஆலையில் இருந்து 20 கி.மீ.,சுற்றளவு உள்ள மக்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-ஆக-201815:41:16 IST Report Abuse
இந்தியன் kumar ஊழல் அதிகாரிகளை களையெடுக்க வேண்டும் . லஞ்சம் ஊழல் ஒழிந்தால் தான் நாடு முன்னேறும். .
Rate this:
Share this comment
Cancel
20-ஆக-201814:58:52 IST Report Abuse
nanthuji,thailand கவலை வேண்டாம் மக்களே, மத்திய அரசு வெகு விரைவில், இந்த சோம்பேறி& ஊழல் அதிகாரிகளை மாற்றவும், தண்டிக்கவும் சட்டமியற்ற உள்ளது.. உதவாத ஊழல் பெருச்சாளிகள்,வீட்டிற்க்கு செல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை... தற்போதய அரசு எந்திரம் லஞ்ச பணத்தை காட்டினால் மட்டுமே கண் திறப்பார்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X