நங்கநல்லூர் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை... குறைகிறது!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2018
03:11

அரை நுாற்றாண்டு பெருமை பெற்ற, நங்கநல்லுார் அரசு மேல்நிலைப் பள்ளி, முறையான பராமரிப்பும், நிர்வாகத்தின் போதிய அக்கறையும் இல்லாத காரணத்தால், மாணவர் சேர்க்கை குறைந்து, விரைவில் பூட்டு போடும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.சென்னை, ஆலந்துார் அடுத்த நங்கநல்லுாரில் அமைந்துள்ளது, நேரு அரசு மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளி, 1964ல், உயர்நிலைப் பள்ளியாக துவக்கப்பட்டு, 1978ல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பிரம்மாண்ட விளையாட்டு மைதானத்துடன், 13 ஏக்கர் பரப்பளவில், இப்பள்ளி இயங்கி வந்தது. 1986ல், இப்பள்ளியில் இருந்து மாணவியர் தனியாக பிரிக்கப்பட்டு, மூன்று ஏக்கர் பரப்பளவில், தனி பள்ளியாக நடத்தப்பட்டு வருகிறது.இதனால், ஆரம்பத்தில், 6,000 மாணவர்களுடன், தென்சென்னையில் பெரிய பள்ளியாக இருந்த நேரு பள்ளியில், பின்னர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்தது. மாணவர்கள் வசதிக்காக, 1995ல் பள்ளிக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டன. அதன் பின், புதிய கட்டடங்களோ, தற்போதுள்ள கட்டடங்களுக்கான பராமரிப்போ இல்லை. சுற்றுவட்டாரப் பகுதியில், தனியார் பள்ளிகளின் வரவாலும், இப்பள்ளி கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. இதனால், மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை, ஆண்டுதோறும் குறைய துவங்கி, தற்போது, 700க்குள் சுருங்கிவிட்டது.30 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கட்டடங்கள், கான்கிரீட் பெயர்ந்தும், சுவர்களில் விரிசல் விட்டும், சிமென்ட் பூச்சு பெயர்ந்தும் காணப்படுகின்றன. இதனால், மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பள்ளி பாதுகாப்பிற்கு காவலாளிகள் நியமிக்கப்படவில்லை. இதனால், இரவு நேரத்தில், இப்பள்ளி சமூக விரோதிகளின் பிடியில் சிக்கி தவிக்கிறது.இரவில் சுற்றுச்சுவரை தாண்டி, வகுப்பறைகளின் பூட்டை உடைத்து, உள்ளே நுழையும் கும்பல், சூதாட்டம், மது, பெண்களுடன் உல்லாசம் என, சமூக விரோத செயல்களை அரங்கேற்றி வருகிறது.மாணவர்கள், வகுப்பறைகளில் இருந்து, மதுபாட்டில்கள், சீட்டு கட்டுகள், ஆணுறைகள், சிகரெட் துண்டுகளை அகற்ற வேண்டிய அவல நிலைக்கு, தினமும் ஆளாகி வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், அரை நுாற்றாண்டு பெருமை பெற்ற இப்பள்ளிக்கு, விரைவில் பூட்டு போடும் நிலை, பள்ளி கல்வித்துறைக்கு ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை என்பதே உண்மை.
அமைச்சர் ஆய்வு நடத்துவாரா?


பள்ளியில், 1987ம் ஆண்டு கட்டப்பட்ட, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று, ஆடவர், மகளிர் பள்ளிகளுக்கு மத்தியில் உள்ளது. அது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. மேல்நிலை வகுப்பிற்கு, இயற்பியல், கணினி அறிவியல், வணிகவியல் போன்ற பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதனால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.மிகவும் பெருமை பெற்ற இப்பள்ளிக்கு, புத்துயிர் அளிக்க வேண்டியது பள்ளிக் கல்வித்துறையின் கடமை. அமைச்சர், செங்கோட்டையன், இப்பள்ளிக்கு நேரில் ஆய்வு மேற்கொண்டால், விடிவு கிடைக்கும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
பிரமாண்ட விளையாட்டு மைதானம்!


நங்கநல்லுார் நேரு பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானம், ஏழு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு, நேரு விளையாட்டு அரங்கம் போல, அனைத்து வகையான உள்விளையாட்டு அரங்கங்களையும் அமைக்கலாம்.சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கும், மைதானத்தை வாடகைக்கை விட்டு, அதில் வரும் தொகையில், முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம். இது குறித்து, பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து நடவடிக்கை எடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Basha - TamilNadu,இந்தியா
25-ஆக-201802:34:02 IST Report Abuse
Basha நான் படிச்ச பள்ளிக்கூடம் இதை வாசிக்கும் போது என்னையும் அறியாமல் கண்கள் கலங்கிவிட்டது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தயவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும். இன்று என் பள்ளிக்கு ஏற்பட்ட இந்த கதி பிற்காலத்தில் எந்த பள்ளிக்கும் ஏற்படக்கூடாது. எங்கள் பொக்கிஷம் இந்த பள்ளி
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
23-ஆக-201816:55:48 IST Report Abuse
kalyanasundaram YES YOU ARE REAL RAJA(N) FOR SUCH APPROPRIATE COMMENTS / OBSERVATIONS. WHEREVER YOU GO IN FOREIGN COUNTRIES EDUCATION IS PRIME FOR ELEVATING INTELLIGENCE LEVEL AND COUNTRIES PROGRESS . BUT IN INDIA PUBLIC SHOULD / WILL NOT BE EDUCATED SINCE THEY WILL QUESTION THE COUNTRY. BY RESERVATION POLICIES COUNTRY IS GOING TOWARDS PREHISTORIC STAGE
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
23-ஆக-201814:32:29 IST Report Abuse
christ அரசு ஊழியர்கள் பெரும்பாலும் சம்பளம் மட்டும் வந்தால் போதும் என தங்களுக்கு ஒதுக்கபட்ட வேலைகளில் அக்கறை செலுத்துவதில்லை .இவர்களின் பணிகளில் குறைகள் இருந்தால் இவர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யப்படும் என ஒரு சட்டம் இயற்றினால் இவர்களின் வேலை சுறுசுறுப்பு அடையும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X