| போலீஸ் டைரி Dinamalar
போலீஸ் டைரி
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 ஆக
2018
11:09

துப்பாக்கிமுனையில் ரவுடி கைது
திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் அருகே, நேற்று முன்தினம் இரவு நின்றிருந்த ஒருவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர், கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்து தப்பினான். இது குறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீசார், மாட்டுமந்தை அருகே, அந்த நபரை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து, கைது செய்தனர். விசாரணையில், திருவொற்றியூரைச் சேர்ந்த பிரபல ரவுடி பிரபு, 35, என்பது தெரியவந்தது.
2வது மாடியிலிருந்து குதித்த நடத்துனர்
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர், முருகன், 28; சென்னை, பரங்கிமலையில் தங்கி, மாநகர போக்குவரத்து கழக, ஆலந்துார் பணிமனையில், நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 2:00 மணிக்கு, பணிமனையின் இரண்டாவது தளத்தில் இருந்து கீழே குதித்தார். காயமடைந்த அவரை மீட்ட சக பணியாளர்கள், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பரங்கிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
மனைவியை கொன்றவன் கைது
அண்ணா நகரைச் சேர்ந்தவன், சீனிவாசன், 25. அவனது மனைவி அம்மு, 23. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட சீனிவாசன், நேற்று முன்தினம் அதிகாலை ஏற்பட்ட தகராறில், அம்முவை கழுத்தை அறுத்து கொன்று தப்பினான்.அண்ணா
நகர் போலீசார், திரு.வி.க., பூங்கா அருகே பதுங்கி இருந்த சீனிவாசனை, நேற்று இரவு கைது செய்தனர்.
கஞ்சா விற்ற இருவர் கைது
மணலி அடுத்த மாத்துார் பிரதான சாலையில், இருவர் கஞ்சா விற்பதாக, நேற்று முன்தினம் இரவு, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற மாதவரம் பால்பண்ணை போலீசார், கஞ்சா விற்ற இருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், பெரியதோப்பைச் சேர்ந்த பிரவீன் பிரபாகர், 26, வினோத், 22, ஆகியோரை கைது செய்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மோதலில் 9 பேர் கைது
புளியந்தோப்பைச் சேர்ந்தவன், பாலகிருஷ்ணன், 41. அவருக்கும், அதே பகுதையைச் சேர்ந்த தேவிகலா, 35, என்பவருக்கும், நடைபாதை கடை போடுவதில் முன் விரோதம் இருந்துள்ளது.
இது தொடர்பாக, நேற்று முன்தினம் இரவு, தேவிகலாவின் மகளை, பாலகிருஷ்ணன் கண்டித்திருக்கிறான். இதில், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்த புகாரின்படி, பாலகிருஷ்ணன், 41, தேவிகலா, 35, உட்பட ஒன்பது பேரை கைது செய்து, புளியந்தோப்பு போலீசார்
விசாரிக்கின்றனர்.
33 மடிக்கணினி பறிமுதல்
வடபழனி, விருகம்பாக்கம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில், தொடர் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து, உதவி கமிஷனர் சங்கர் தலைமையில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த, முகமது ரபீக், 31, சையத் அபுதாகீர், 30, இருவரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை நேற்று, கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 33 மடிக்
கணினிகளை பறிமுதல் செய்தனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X