'‛எஸ்கலேட்டர்' மேம்பால பணி குறித்த காலத்தில்... முடியுமா? நேர பற்றாக்குறையால் நெடுஞ்சாலைத்துறை தவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 செப்
2018
05:33

தாம்பரம் பேருந்து நிலையம் அருகே கட்டப்படும், 'எஸ்கலேட்டர்' வசதியுடன் கூடிய நடை

மேம்பால பணிகளை மேற்கொள்ள, போதிய நேர அவகாசமின்றி, நெடுஞ்சாலை துறையினர்

தவித்து வருகின்றனர். இதனால், ஒப்பந்த காலத்திற்குள் பணிகள் முடிவது சந்தேகமாகி உள்ளது.தாம்பரத்தில், பேருந்து, ரயில் நிலையம், மார்க்கெட் பகுதி ஆகியவை, அருகருகே உள்ளன. இதில், பேருந்து நிலையத்திலிருந்து, ஜி.எஸ்.டி., சாலையை கடந்து, ரயில் நிலையம் செல்ல வசதியாக சுரங்கப்பாதை உள்ளது. பாதசாரிகள் அதை பயன்படுத்துவதை தவிர்த்து, சாலை மீடியனில் ஏறிக் குதித்து, சாலையை கடந்து வந்தனர். இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன.இதை தடுக்க,பேருந்து நிலையத்தின் அருகில், சாலையை கடக்க வசதியாக, புதிய சிக்னல் அமைக்கப்பட்டது. புதிய சிக்னலால், ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறங்களிலும், வாகன நெரிசல் அதிகரித்து, வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்றனர்.இதையடுத்து, போக்குவரத்து நெரிசலை தடுக்கவும், பாதசாரிகள் எளிதில், சாலையை கடக்கும் வகையிலும், பிரதான சந்திப்பில், 'எஸ்கலேட்டர்' வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்க, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அறிவிப்பு வெளியிடப்பட்டது.அரசியல் தலையீடு, நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நீண்ட இழுபறிக்கு பின், ஜூன் மாதம் பணிகள் துவங்கின. மொத்தம், 70 கோடி ரூபாய் மதிப்பில் நடை மேம்பாலம் கட்டப்படுகிறது. பணிக்கான ஒப்பந்த காலம், 18 மாதங்கள். இந்நிலையில், பணிகள் துவங்கியது முதல் மந்தகதியில் நடப்பதால், முன்பு இருந்ததைவிட, தற்போது நெரிசல் இருமடங்கு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து, பாதசாரிகள் கூறியதாவது: பாலம் கட்டும் பணி மந்தமாக நடப்பதால், 'பீக் - அவர்களில்' ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறத்திலும், முன்பு இருந்ததைவிட, வாகன நெரிசல் அதிகரித்து உள்ளது.வாகனங்கள் நீண்ட வரிசையில், அணிவகுத்து நிற்பதால், பணிக்கு செல்வோர், கல்லுாரி மாணவர்கள் உட்பட, அனைத்து தரப்பினரும் அவதியுறுகின்றனர்.சில வாகன ஓட்டிகள், முந்திச் செல்ல முயன்று, சாலையோரம் நடந்து செல்லும் பாதசாரிகள் மீது மோதி, விபத்தை ஏற்படுத்துகின்றனர். அதனால், சாலையில் நடந்து செல்லவே அச்சமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: திட்டப்படி, ஜனவரி மாதமே பணி துவங்கி இருக்க வேண்டும். மேம்பால பணிக்கு, தொலை தொடர்பு, மின்வாரியம், நகராட்சி, குடிநீர் வாரியம் ஆகியவற்றிடம் அனுமதி பெறவே, ஆறு மாத காலமாகிவிட்டது. போக்குவரத்து போலீசாரிடம், காலை மற்றும் இரவு நேரங்களில் பணி செய்ய அனுமதி கோரினோம். அவர்கள், இரவு, 11:00 மணி முதல், அதிகாலை, 5:00 மணிவரை மட்டுமே அனுமதி அளித்துள்ளனர்.இதனால், கட்டுமான பணிக்கு தேவையான பொருட்களை கூட, இரவில் தான் கொண்டு வர முடிகிறது. பணி செய்ய போதிய அவகாசம் இன்றி, தற்போது வரை, 20 சதவீத கட்டுமான பணிகள் மட்டுமே முடிந்துள்ளன.இது தவிர, ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறங்களிலும், உயர் அழுத்த மின்வடங்கள் செல்கின்றன. அவற்றை, பூமிக்கடியில் புதைத்தால் தான், இருபுறமும், 'எஸ்கலேட்டர்' அமைக்க இடையூறு இல்லாமல் இருக்கும்.அந்த பணிகளை, மேற்கொள்ள கோரி, மின்வாரியத்திடம் கோரிக்கை விடுத்தோம். அதுவும், மந்கதியில் நடந்து வருகிறது.தற்போது கட்டப்படும் மேம்பாலம், பயணிகள் வசதிக்காக, ரயில் நிலையத்திற்குள் நேரடியாக இணைக்கப்பட உள்ளது. இதில், புறநகர் ரயில்களுக்கான, டிக்கெட் கவுண்டர்களும் வர உள்ளன.இதற்காக, மேம்பாலத்தை, ரயில் நிலையத்துடன் இணைக்க, ரயில்வேயிடம் அனுமதி கோரி, ஒரு வருடத்திற்கு முன்பு, கடிதம் அளித்தோம். அதற்கு, சமீபத்தில் தான் அனுமதி கிடைத்துள்ளது.எனினும், ரயில்வேயிலிருந்து, மேம்பாலத்தை ரயில் நிலையத்துடன் இணைக்க, அனுமதி சான்றிதழ் வழங்க வேண்டும். அப்போது தான், பணிகளை இடையூறு இன்றி, முடிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.ஜி.எஸ்.டி.,சாலையில், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில், மேம்பால பணிக்கு அனுமதி அளித்தால், நெரிசல் அதிகரித்து, விபத்துகள் நிகழும். இதை கருத்தில் கொண்டே, இரவு ரேநங்களில் மட்டும் பணி செய்ய அனுமதி வழங்கினோம்.


-போக்குவரத்து போலீசார்- நமது நிருபர்- -

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
01-செப்-201814:27:59 IST Report Abuse
venkatan பொது நிர்வாகத்தில் இது போன்ற ஒருங்கிணைந்த பணிகளை செய்ய ஒரு தனி அமைப்பு அல்லது பணிக்குழுவை அமைத்து தலைமைக்கு இணை செயலாளர் அந்தஸ்தில் ஒரு அதிகாரியை நியமித்து,ஒரு ஒற்றைச்சாளர முறையில் அனைத்து துறை அனுமதி சான்றிதழும் பெற்று,காலக்கெடுவும் நிர்ணயித்து பணியை செவ்வனே முடிக்கலாமேபணி முன்னேற்றம் குறித்து அவ்வப்பொழுது ஆலோசனை கூட்டமும் நடத்தலாம்.if there is a' wish', cetainly the 'will 'automatically comes
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
01-செப்-201813:33:02 IST Report Abuse
christ தாம்பரத்தில் எஸ்கலேட்டர் வசதி செய்யப்படுகிறது இது எத்தனை நாளைக்கு வேலை சேயும் ? பல லட்சத்தில் சுரங்க பாதை அமைத்தும் முறையான பராமரிப்பு இல்லாமல் தாம்பரத்தில் சுரங்கப்பாதை நுழைவு பகுதியில் ஆரம்பித்து சுரங்கப்பாதை முழுவதும் கடைகளை போட்டு ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கி தவிக்கிறது .இதனால் சுரங்கப்பாதை நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது . இதனால் பொதுமக்கள் யாவரும் சுரங்கப்பாதையை தவிர்த்து சாலையை கடந்து செல்வதற்கே முற்படுகின்றனர் .இதனால் தாம்பரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது சுரங்கப்பாதையில் கடைகளை போட ரயில்வே போலீஸ் ,போக்குவரத்து போலீஸ் என இரண்டு பேரும் மாமுலை வாங்கிக்கொண்டு உடந்தையாக உள்ளனர் . இதற்கு செலவிடப்படும் தொகையை தாம்பரம் MCC கல்லூரி அருகில் சுரங்கப்பாதை ,அல்லது நடைமேம்பாலம் அமைக்கலாம் .அங்கு சாலையை கடக்க போக்குவரத்தை நிறுத்திதான் சாலையை கடக்க வைக்கின்றனர் .இதனால் நேரமும் ,எரிபொருளும் வீணாகின்றன .
Rate this:
Share this comment
Cancel
Sekar KR - Chennai,இந்தியா
01-செப்-201809:59:36 IST Report Abuse
Sekar KR இது போன்ற முக்கியமான திட்டங்களை விரைவில் முடிக்க Task force அமைத்து அதில் அனைத்து துறை சார்ந்தவர்களை உறுப்பினர்களாக அமர்த்தி அவரவர் துறை சம்பந்தப்பட்ட வேலைகளை அவர்களே பார்த்துக்கொடுக்க வேண்டும். வாரம் ஒருமுறை Task force மீட்டிங் வைத்து Outcome என்ன? தாமதத்திற்க்கான காரணம் என்ன என்பதை பதிவு செய்து மேலிடத்திற்கு அனுப்பவேண்டும். பிறகு பாருங்கள் வேகத்தை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X