கிறிஸ்தவ மத பிரசார பாடலாக மாறிய மும்மூர்த்தி கீர்த்தனைகள்; பிராமணர் சங்கம் கண்டனம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 செப்
2018
05:53

சென்னை : கர்நாடக இசை மும்மூர்த்திகளின் கீர்த்தனைகளை, கிறிஸ்தவ மத பிரசாரத்திற்கு ஏற்றபடி, பாடல் வரிகளை மாற்றியதற்கும், அதை பாடிய கர்நாடக இசை கலைஞர்களுக்கும், தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பிரபல கர்நாடக சங்கீத வித்வான்களான, ஓ.எஸ்.அருண், நித்யஸ்ரீ மகாதேவன் மற்றும் அருணா சாய்ராம். இவர்கள் மூவரும், இசைத்துறையில் மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாம சாஸ்திரிகள் ஆகியோரது கீர்த்தனைகளை, அதே ராகத்தில் வார்த்தைகளை மாற்றி, கிறிஸ்தவ மத பிரசாரத்திற்காக பாடி, 'சிடி' - இசை ஆல்பம் வெளியிட்டுள்ளனர்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: கர்நாடக சங்கீதம் இறைவனை பற்றி பாடப்பட்டதாகும். அனைத்து கீர்த்தனைகளிலும் ராமர், கிருஷ்ணர், மகாவிஷ்ணு, சிவபெருமான், அம்பாள், லட்சுமி ஆகிய தெய்வங்களை போற்றி, வேண்டி பாடப்பட்டது.குறிப்பாக, தியாகராஜர், தான் கஷ்டப்பட்ட காலத்திலும், 'பகவானை பாடிய வாயால், வேறு யாரையும் போற்றி பாட மாட்டேன்' என்று கூறி, இசைக்காக வாழ்ந்தவர். அப்படிப்பட்டவரது கீர்த்தனைகளை பணத்திற்காக, சுய லாபம்; விளம்பரத்திற்காக கிறிஸ்தவ பாடல்களாக, 'ராமா' என்று வரும் இடத்தில், 'இயேசுவே' என, போற்றி பாடியிருப்பது, தியாகராஜருக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம்.ஜேசுதாஸ், ஜான்ஹிக்கின்ஸ் போன்ற வேறு மதத்தினர், கர்நாடக சங்கீதத்தை முறையாக கற்று, முழு தெய்வ நம்பிக்கையுடன் பாடினரே தவிர, மதப்பிரசாரம் செய்யவில்லை. கர்நாடக சங்கீதம், அதன் கீர்த்தனைகள் இறைவனிடம் நம்மை கொண்டு சேர்க்கும் பாடல்கள். அப்படிப்பட்ட புனிதமான கீர்த்தனைகளை, மதப்பிரசாரத்திற்கு பொருள் மாற்றி பாடியது பச்சை துரோகம்.வருங்காலங்களில் இசை விழாவிலோ, தியாக ராஜர் ஆராதனையிலோ பாட, இவர்கள் அருகதையற்றவர்கள்; இனி சங்கீத சபாவிலும் பாடுவதற்கு தகுதியற்றவர்கள். இதுபோன்ற அநியாயங்களுக்கு குரல் கொடுக்கும், டி.எம்.கிருஷ்ணா, புதுமை என்ற பெயரில் பாரம்பரிய புனிதத்தை கொச்சைப்படுத்துவது வாடிக்கை.இந்த பிரச்னைக்கு மூல காரணமான அருண் கேஸ்பர் போன்ற புரோக்கர்களிடம் விலை போகும் நம் இசைக் கலைஞர்களின் வக்கிர புத்தி கண்டிக்கத்தக்கது. இதே நிலை தொடர்ந்தால், வீதிக்கு வந்து போராட்டம் நடத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு கூறினார்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
03-செப்-201816:20:26 IST Report Abuse
அம்பி ஐயர் சில பல ஆண்டுகளுக்கு முன்னரேயே... நமது ஸ்லோகங்களை எல்லாம் மாற்றி ஓம் என்று ஆரம்பித்து நமஹ என்று முடிப்பதும் இடையில் இயேசுவின் பெயர்களை இட்டு நிரப்பியும் ஒலிபரப்பிவருகின்றனர்.... அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த லவுட் ஸ்பீக்கர்களின் சத்தம் காதைப் பிளக்கும்.... இதை எதிர்த்து அனைத்து பிராமணர்களும் போராட வேண்டும்.... கேவலம் பணத்திற்காக நமது இசைக் கலைஞர்கள் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டிருக்க வேண்டாம்...
Rate this:
Share this comment
Cancel
R S GOPHALA - Chennai,இந்தியா
03-செப்-201810:56:46 IST Report Abuse
R S GOPHALA மிகவும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய விஷயம். இவர்கள் இதற்கு எப்படி துணை போனார்கள் என்று தெரியவில்லை. இவர்களை இனி எந்த சபாக்களிலும் பாட அனுமதிக்க கூடாது. காசுக்காக எதையும் செய்ய துணிந்து விட்டார்கள். இவர்கள் துரோகிகள். மும்மூர்த்திகளுக்கும் மாபெரும் பாதகத்தை செய்து விட்டார்கள். இவர்களை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும். கிறித்துவம் நமது அடையாளங்கள் அனைத்தையும் ஓவ்வொன்றாக சிதைத்துக்கொண்டு வருகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் தன் மானத்தையே, சுய கவரவத்தையே விற்க துணிவார்களா ??
Rate this:
Share this comment
Cancel
Kannan Iyer - Bangalore,இந்தியா
03-செப்-201808:49:32 IST Report Abuse
Kannan Iyer திருவள்ளுவர் இயேசுவின் சீடர் என்று பொய்யுரைக்கிறார்கள். இயேசு சஹஸ்ரநாமம் வந்துவிட்டது என்று சொல்கிறார்கள். நமது சமய மக்களுக்கு நாம் தான் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இந்து சமய மடாதிபதிகளும் கவனிக்க வேண்டிய விஷயம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X