சென்னையின் நீர்வழித்தடங்களை சீரமைக்க...ரூ.100 கோடி! அடையாறு, கூவத்தில் வெள்ள தடுப்பு பணி வடகிழக்கு பருவமழைக்கு முன்னெச்சரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2018
23:51

வடகிழக்கு பருவமழை துவங்க, இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நீர்வழித்தடங்களை புனரமைக்க, வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கான விரிவான ஆலோசனை, இரு துறை அதிகாரிகள் மட்டத்தில் நடந்தது.சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளின் நீர்த்தேவையில், பெரும்பகுதி வடகிழக்கு பருவமழை காலத்தில் பெறப்படுகிறது. இதில், ஓரிரு செ.மீ., அளவு மழை பெய்தாலும், சென்னை சாலைகள் வெள்ளக்காடாக மாறிவிடுகிறது.கடந்த, 2015 நவ., டிச., மாதங்களில், அதிகபட்ச மழை பெய்தபோது, சென்னையின் இயல்பு வாழ்க்கை, முற்றிலுமாக முடங்கியது. செம்பரம்பாக்கத்தில் இருந்து அதிகபட்ச நீர் திறப்பால், தென்சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டன.இதன் பின், சென்னையின் நீர் வழித்தடங்களை சீரமைக்க, பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிவித்தது.முன் எப்போதும் இல்லாத வகையில், வருவாய்த்துறை தலைமையில், உள்ளாட்சி, மின்வாரியம், பொதுப்பணி, நெடுஞ்சாலை, குடிநீர் வாரியம், தீயணைப்பு, சுகாதாரம், சி.எம்.டி.ஏ., என, பல துறைகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.சென்னையில், வெள்ள நீர் வடிந்து செல்வதற்கு, தடையாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, மழைநீர் கால்வாய்களை சீரமைப்பது போன்ற பணிகள், இக்குழுவின் மேற்பார்வையில் நடந்து வருகிறது.குறிப்பாக, கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா ஆகியவற்றுக்கு வெள்ள நீர் செல்லும் வழித்தடங்களில், சிறப்பு முன்னுரிமை அடிப்படையில், கால்வாய் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.இந்த வகையில், சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளுக்கு, 100 கோடி ரூபாய் செலவிட இருப்பதாக, முதல்வர் பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார்.முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்துவது குறித்து, வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், சமீபத்தில், சென்னை, எழிலகத்தில் விரிவான ஆலோசனை நடத்தினர்.இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில் உள்ள நீர்வழித்தடங்களில், மழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதற்கு, 8 கோடி ரூபாயை, அரசு ஏற்கனவே ஒதுக்கி அரசாணை வெளியிட்டு உள்ளது.இதில், துார்வாரும் பணிகள் மட்டும், வடகிழக்கு பருவமழை முடியும் வரை தொடர்ந்து நடக்கும்.சென்னை நீர்வழித்தடங்களில், 100 கோடி ரூபாய் செலவில், நிரந்தர கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.பருவமழை, அக்., மாதம் துவங்க உள்ள நிலையில், என்னென்ன பணிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பது குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.இதற்காக, கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில், சில பணிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


அதிகாரிகள் கவனத்திற்கு...*சென்னையில் நடைபெறும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளில், சில விஷயங்களை அதிகாரிகள் கவனிக்க வேண்டும். இது குறித்து நீர் வளத்துறை வல்லுனர்கள் கூறியதாவது: சென்னையில் எவ்வளவு கி.மீ., தொலைவுக்கு, மழைநீர் வடிகால் அமைக்கிறோம் என்பதைவிட, அந்த கால்வாய்கள் ஒன்றுக்கொன்று முறையாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும்*பெரும்பாலான இடங்களில், அந்த பகுதிக்கும், அடுத்த பகுதிக்கும் நிலத்தின் மேடு, பள்ள தன்மை பார்க்காமல், கால்வாய் அமைக்காதீர்*வடிகால் என்ற பெயரில், தரையில் விழும் மழைநீர் அனைதையும், கான்கிரீட் கால்வாய்கள் வாயிலாக வெளியேற்றுவது தவறான அணுகுமுறை. இதில் குறைந்தபட்சம், 10 மீட்டருக்கு ஒரு இடத்திலாவது, கால்வாயின் அடி மட்டத்தில் இருந்து, நிலத்துக்கு தண்ணீர் இறங்க வசதி செய்ய வேண்டும்


*அதிகபட்ச மழையால் கிடைக்கும் உபரி நீரை மட்டுமே, கடலுக்கு அனுப்ப வேண்டும்; பெரும்பகுதி நீர் நிலத்துக்குள் இறங்க, உரிய வசதியை செய்ய வேண்டும்*முந்தைய காலங்களில் ஏற்பட்ட மழை பொழிவையும், குறைந்த காலத்தில் அதிக அளவு மழை பெய்தால் வரும் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த, அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்*அரசு, தனியார் கட்டடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை, போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-நமது நிருபர்-

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
09-செப்-201817:35:49 IST Report Abuse
kalyanasundaram REMOVE ENCROACHMENT ON LAKES / LOW LYING AREAS . SO THAT RAIN WATER SAVED
Rate this:
Share this comment
Cancel
mayavan - Chennai,இந்தியா
05-செப்-201813:44:46 IST Report Abuse
mayavan கேட்க நல்லாயிருக்கு கேழ்வரகிலிருந்து நெய் ஒழுகிறது காலம்தான் பதில் சொல்லவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X