மக்கள் பிரதிநிதிகள் இல்லாத மாநகராட்சியில்...என்ன தான் நடக்கிறது? கொடிகட்டி பறக்கும் அதிகாரிகளின் ராஜ்ஜியம் சத்தமே இல்லாமல் மக்கள் வரிப்பணம், 'ஸ்வாஹா'
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 செப்
2018
02:15

இரண்டு ஆண்டுகளாக, மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சென்னை மாநகராட்சியில், அதிகாரிகளின் ராஜ்ஜியம் கொடிகட்டி பறக்கிறது. இதனால், சத்தமே இல்லாமல், மக்கள் வரிப்பணம், பல கோடி ரூபாய் சுரண்டப்பட்டு வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.உள்ளாட்சி அமைப்புக்களில், தனக்கென தனி வரலாறு கொண்டது, சென்னை மாநகராட்சி. மொத்தம், 426 சதுர கி.மீ., பரப்பளவில், 200 வார்டுகளை உள்ளடக்கிய மாநகராட்சியில், 70 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.தமிழக அரசுக்கு அடுத்ததாக, ஆண்டிற்கு, 5,000 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போட்டு, மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் அமைப்பாக, சென்னை மாநகராட்சி உள்ளது.அதிரடி உத்தரவுமாநகராட்சியில், துப்புரவு பணியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை, 26 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள், மாநகராட்சிக்கு உள்ளன.இந்த சொத்துகள் களவு போகாமல் பாதுகாக்கவும், 26 ஆயிரம் ஊழியர்களின் ஒழுங்கு நடவடிக்கைகளை கண்காணிக்கவும், பணிகளில் நடக்கும் முறைகேடுகளை கவனிக்கவும், மாநகராட்சியில் விஜிலென்ஸ் பிரிவு துவங்கப்பட்டது.காவல்துறையில் திறமையான அதிகாரியை, இந்த விஜிலென்ஸ் பிரிவுக்கு, மாநகராட்சி கேட்டு பெறும். டி.எஸ்.பி., தலைமையில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் என, 40 பேர் கொண்ட அங்கமாக, ஒரு காலத்தில், இந்த விஜிலென்ஸ் துறை இருந்தது.தற்போது, காவல்துறையில் இருந்து

மூவரும், மாநகராட்சி ஊழியர்கள் ஐந்து பேரும் என, வெறும், எட்டு பேருடன், விஜிலென்ஸ் துறை இயங்கி வருகிறது.மாநகராட்சியில், இரண்டு ஆண்டுகளாக, மக்கள் பிரதிநிதிகளும் இல்லை. இதனால், அனைத்து துறைகளிலும், அதிகாரிகளின் ராஜ்ஜியம் தான், கொடிகட்டி பறக்கிறது.ஒட்டுமொத்தமாக, மாநகராட்சியின் அனைத்து துறைகளிலும், ஊழல் அதிகரித்துள்ளது. உதாரணமாக, மாதவரம் மண்டலத்தில், புதிதாக போடப்பட்ட சாலைகள், ஒரு மாதம் கூட தாக்குபிடிக்காமல், ஜல்லி கற்களாக மாறி உள்ளன.இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், அடக்கி வாசிக்கின்றனர். கட்டமைப்பு பணிகளில் மட்டுமின்றி, விதிமீறல் கட்டடங்கள், ஆக்கிரமிப்புகள் மீதும், மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காமல், முடங்கி கிடக்கிறது.மாநகராட்சி ஊழியர்கள், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடமும், ஒப்பந்ததாரர்களிடமும், வெளிப்படையாக, அலுவலகத்திலேயே லஞ்சம் வாங்குவதை காண முடிகிறது.இந்நிலையில் தான், சென்னை உயர் நீதிமன்றம், சென்னை மாநகராட்சியில் நடைபெறும் ஊழல் குறித்து, சமீபத்தில் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது.மேல் முறையீடுஒட்டுமொத்த மாநகராட்சியிலும், ஊழல் அதிகரித்துள்ளது என்றும், மாநகராட்சி விஜிலென்ஸ் அதிகாரிகளை, கூண்டோடு மாற்ற வேண்டும் என்றும், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், மாநகராட்சியில், அதிகாரிகள் முதல், ஊழியர்கள் வரையிலான அனைவரின் அசையும், அசையா சொத்து பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்பன போன்ற உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்ட பின், நிர்வாகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபடாமல், உயர் அதிகாரிகள், இந்த உத்தரவை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். இது, லஞ்ச ஊழியர்களை ஊக்குவிப்பதாகவே அமையும்.உள்ளாட்சி தேர்தலை நடத்தி, மக்கள் பிரதிநிதிகளை கொண்ட அமைப்பாகவும், நேர்மையான தலைமை அதிகாரிகள், வலுவான விஜிலென்ஸ் அமைப்பு போன்றவற்றை உருவாக்கினாலும் மட்டுமே, மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதில் இருந்து, மாநகராட்சியை மீட்க முடியும்.'எங்களால் என்ன செய்ய முடியும்?'மாநகராட்சி விஜிலென்ஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில் உள்ள, 1,056 தனியார் பள்ளிகள், இதுவரை மாநகராட்சிக்கு வரி செலுத்தவில்லை. இதனால் ஏற்படும் வரி இழப்பு குறித்து, கமிஷனருக்கு அறிக்கை அளித்தோம். தற்போது, தனியார் பள்ளிகள் மூலம், ஆண்டிற்கு, 100 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கிறது.மாநகராட்சியின், ஒவ்வொரு வார்டிலும், 3,000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஆனால், 20 சதவீதம் கடைகளுக்கு மட்டுமே, உரிமம் வழங்கப்பட்டிருந்தது. இதை கண்டறிந்து, அனைத்து கடைகளுக்கும் உரிமம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் வாயிலாக, 300 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.ராயபுரம் மண்டலத்தில், லஞ்சம் பெற்று, 'கமர்ஷியல்' கடைகளுக்கும், குடியிருப்பிற்கான வரி வழங்கிய, உதவி வருவாய் அதிகாரியை பணி இடை நீக்கம் செய்தோம். இதுபோல், 20க்கும் மேற்பட்ட அதிகாரிகளை, இடமாற்றம் செய்துள்ளோம்.துப்பரவு மற்றும் அலுவலகத்தில் பணி

புரியும் பெண்களிடம், பாலியல் தொல்லை அளித்த அதிகாரிகள் பலரையும் கண்டித்துள்ளோம். எங்களுக்கு, விசாரணை செய்யும் அதிகாரம் மட்டுமே உள்ளது.எப்.ஐ.ஆர்., பதிவு செய்யும் அதிகாரம் இல்லை. எங்கள் பிரிவில், ஆட்கள் பற்றாக்குறை அதிகம். மாநகராட்சி விஜிலென்சில், 40 பேர் இருந்த இடத்தில், தற்போது வெறும், மூன்று பேர் மட்டுமே இருக்கிறோம். எங்களால் என்ன செய்ய முடியும்?இவ்வாறு அவர் கூறினார்.கிடப்பில் போனதுரைசாமி திட்டம்!சென்னை மாநகராட்சி விஜிலென்ஸ் பிரிவை, எஸ்.பி., தலைமையில், 50 போலீசாரை கொண்ட, வலுவான, கூடுதல் அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்றி அமைக்க, முன்னாள் மேயர், சைதை துரைசாமி, விரிவான திட்டம் ஒன்றை தயாரித்தார். இதற்கு, மாநகராட்சி மன்ற கூட்டத்திலும் ஒப்புதல் வழங்கப்பட்டது.தமிழக அரசின் ஒப்புதலுக்காக, இந்த கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, இந்த திட்டத்தை நிராகரித்தார். இதனால் இன்று வரை, மாநகராட்சி விஜிலென்ஸ் பிரிவு, கேட்பாரற்ற நிலையிலேயே உள்ளது.நீதிமன்றத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, தற்போதைய தமிழக அரசாவது, மாநகராட்சி விஜிலென்ஸ் பிரிவை, ஐ.பி.எஸ்., அதிகாரியின் தலைமையில், வலுப்படுத்தி அமைக்க வேண்டும்.முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளை, விஜிலென்ஸ் அதிகாரிகளால் அடையாளம் கண்டு, கமிஷனர் கவனத்துக்கு கொண்டு செல்ல மட்டுமே முடியும். அவர்கள் மீது, கமிஷனர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மாநகராட்சியில் நடைபெறும் ஊழல் முறைகேடுகள் தொடர்பாக, கமிஷனர் நேரடியாகவே தலையிட்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.ஆனால், தங்களது துறையின் கீழ் நடைபெறும் ஊழல்களை, அதிகாரிகள் கவனிப்பதே இல்லை. இந்த விவகாரத்தில், விஜிலென்ஸ் அதிகாரிகளை மட்டுமே, குறை கூற முடியாது. நடவடிக்கை எடுக்க தவறிய, கமிஷனர் உட்பட அனைத்து அதிகாரிகள் மீதும், தவறு உள்ளது.எம்.ஜி.தேவசகாயம், முன்னாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிசென்னை மாநகராட்சியில், பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, ஆக்கிரமிப்பில் உள்ளன. இது குறித்து, அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றாலும், நடவடிக்கை எடுப்பதில்லை. ஊழல் அதிகாரிகள் குறித்து, மக்களுக்கு தெரிய வர வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மாநகராட்சி மேல்முறையீடு செய்யக் கூடாது.ஆர்.நடராஜன், சமூக ஆர்வலர்விஜிலென்ஸ் சேவை அவசிய தேவை!
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில், விஜிலென்ஸ் அதிகாரிகளின் பங்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கடந்த காலங்களில், விஜிலென்ஸ் அதிகாரிகளின் முயற்சியில், மாநகராட்சியின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டதுடன், முறைகேடுகளும் கண்டறியப்பட்டன. அதில் சில:* போலி சான்றிதழ் கொடுத்து, மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களை, விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்டுபிடித்து, பணியில் இருந்து துாக்கினர்* 'அம்மா' உணவகங்களில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டறிந்து, மேயரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்* இலவச கழிப்பறைகளில் வசூல் நடத்தியவர்களை, போலீசில் பிடித்துக் கொடுத்து, ஜெயிலுக்கு அனுப்பினர்* கோட்டூர்புரத்தில், தனியார் பள்ளியின் ஆக்கிரமிப்பில் இருந்த, மாநகராட்சிக்கு சொந்தமான, பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மீட்க முக்கிய காரணமாக இருந்தனர்* மாநகராட்சி சமுதாய கூடங்களில் நடந்த முறைகேடு களை, மேயர் கவனத்திற்கு கொண்டு சென்று, தலைமை அலுவலகத்தில், அவற்றை முன்பதிவு செய்யும் திட்டத்தை கொண்டு வர காரணமாக இருந்தனர்.


- நமது நிருபர் -

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07-செப்-201808:46:28 IST Report Abuse
Srinivasan Kannaiya முதலில் கவுன்சிலர் சாப்பிட்டான் ... இப்போ அரசு அதிகாரிகள் சாப்பிடுகிறார்கள்.. அவர்களை கட்டுக்குள் வைக்க வேண்டிய அரசு... கொர் கொர் கொர் கொர் கொர் கொர் கொர் கொர் கொர்
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
06-செப்-201811:18:27 IST Report Abuse
ganapati sb தேவையான அளவு சம்பளம் பெரும் அரசு அதிகாரிகள் ஒழுங்காக தன் கடமையை சட்டப்படி மக்கள் நலனுக்காக செய்யாமல் கேவலம் பணத்திற்காக ஊழல் முறைகேடு செய்வது கண்டிக்கத்தக்கது. பிச்சைக்காரன் பரவாயில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X