| கண்டுபிடிப்பு!  6 மாதங்களில் 2,000 பேருக்கு காச நோய்...  உதவித்தொகை, 1,800 பேருக்கு வழங்கல் Dinamalar
கண்டுபிடிப்பு!  6 மாதங்களில் 2,000 பேருக்கு காச நோய்...  உதவித்தொகை, 1,800 பேருக்கு வழங்கல்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

06 செப்
2018
04:00

காஞ்சிபுரம்,:மாவட்டத்தில், ஆறு மாதங்களில், 2,000 பேருக்கு காச நோய் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதில், 1,800 பேருக்கு ஊட்டச்சத்து பெறுவதற்கான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக,

மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குனர், செந்தில்குமார் தெரிவித்தார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2025ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என, திட்டமிடப்பட்டுஉள்ளது. இதற்காக காசநோய் உள்ளவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.காற்றின் மூலம் பிறருக்கு பரவக்கூடிய காசநோய் ஏற்பட்டவர்கள், தொடர்ந்து ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை, இடை விடாமல் சிகிச்சை பெற்றால், குணமடையலாம் என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், நல்ல ஊட்டச்சத்து உட்கொண்டால், நோய் விரைவில் குணமாகும் என்பதால், மத்திய அரசு இந்த நோயாளிகளுக்கு மாதம், 500 ரூபாய் உதவித் தொகை வழங்குகிறது.இந்த திட்டம் ஏப்., மாதம் துவங்கப்பட்டது. அதிலிருந்து, ஆக., மாதம் வரை, 1,800 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.மாவட்ட காச நோய் மைய கணக்கெடுப்பின் படி ஜன., முதல் ஜூன் வரை, 2,000 பேருக்கு காச நோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.இதில், 1,787 பேர் சிகிச்சை முடிந்தவர்கள்,103 பேர் இடம் பெயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.காச நோய் இருப்பதை கண்டறிய சில ஆண்டுகளுக்கு முன், மூன்று மாதங்கள் வரை ஆகும். பின், நவீன பரிசோதனை மூலம், ஒரு வாரத்தில் கண்டறியும் வசதி ஏற்பட்டது.


தற்போது, இரண்டு மணி நேரத்தில் காச நோய் அறிகுறிகள் கண்டறிய கூடிய அதி நவீன மருத்துவ கருவிகள் வந்து விட்டன.தற்போது அந்த கருவி, மாவட்டத்தில், தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை, செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் உள்ளன.இது குறித்து, காச நோய் பிரிவு, துணை இயக்குனர், மருத்துவப் பணிகள் ஏ. செந்தில்குமார் கூறியதாவது:காச நோய் என்பது பெரும்பாலும் நுரையீரலை பாதிக்கும். அதை தவிர்த்தும் பிற உறுப்புகளை பாதிக்ககூடிய காசநோயும் உள்ளது.அதன் அறிகுறிகள் இருப்பவர்கள், கட்டாயம்சளி பரிசோதனை செய்து, உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் மாதம் சராசரியாக, 850 பேர் சிகிச்சை பெறுகின்றனர். தற்போது, காச நோய் கண்டறியும் அதிநவீன கருவி, காஞ்சிபுரம் காச நோய் பிரிவுக்கும் விரைவில் வழங்கப்பட இருக்கிறது.இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள், மற்றவர்களுக்கு பரப்பாமல் இருக்க, இருமல் வரும் போது கைக்குட்டை அல்லதுதுணியால் வாயை மூடுவது நல்லது.கண்ட இடத்தில் எச்சில் துப்புதல் கூடாது. உடலில் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்த சத்தான உணவுகளான முட்டை, பால் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதற்காகத் தான் அரசு, ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் உதவித் தொகை வழங்குகிறது. பிற மாவட்ட மாநில மக்கள், 45 சதவீதம், தாம்பரத்தில் சிகிச்சை பெறுகின்றனர்.நோயாளிகள் தொடர் சிகிச்சை பெற்று வந்தால், ஆறு மாதங்களில் குணப்படுத்தலாம். இதனால், நோயாளிகள் வீட்டுக்கு சென்று, அவர்களை கண்காணித்து வருகிறோம்.


காசநோய் அறிகுறிகள்இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருமல், சளி, பசியின்மை, சளியுடன் ரத்தம் வருதல், மாலை நேரத்தில் காய்ச்சல். மேலும், மார்பு வலி, எடை குறைதல், மூச்சு இறைத்தல் இந்த அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் இதற்கான சிகிச்சை பெறலாம். 

மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X