பலியான யானையின் பாகனுக்கு சிறை பணம் பறிப்பு கசிந்ததால் பழிதீர்த்தது வனத்துறை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2018
03:45

திருநெல்வேலி:இறந்த பெண் யானையை அடக்கம் செய்ய பாகன் அசன்மைதீனிடம் பணம் பறித்த செய்தி வெளியானதால், அவரை வனத்துறையினர் சிறையில் அடைத்தனர்.திருநெல்வேலி மாவட்டம், தென்காசியை சேர்ந்தவர் பீர்முகைதீன். யானைகளை ஊர்வலங்கள், நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தி பணம் பெற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.இவரிடம் இருந்த

82 வயது பெண் யானை சுந்தரி உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே யானையை பாகன் அசன்மைதீனிடம் ஒப்படைத்துவிட்டு பீர்முகைதீன் சென்றுவிட்டார்.

அசன்மைதீன், பொதுமக்களிடம் வசூல் செய்து தினமும் 1500 ரூபாய் செலவு செய்து யானையை பராமரித்து வந்தார். திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவமனையில் யானைக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

இது குறித்து செய்தி வெளியானதால் மாவட்ட வனஅலுவலர் திருமால் உள்ளிட்டோர் யானையை முதுமலை வனப்பகுதிக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். ஆனால் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. செப்.,3 மாலையில் யானை பரிதாபமாக இறந்தது.

யானையை அடக்கம் செய்ய பாகனிடம் ரூ.17 ஆயிரம் வனத்துறையினர் கேட்டனர்.

அங்கு வந்திருந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கணேஷ்ராஜா ரூ.10 ஆயிரம் கொடுத்தார். அதை பாகன் வனத்துறையிடம் அளித்து மீதி தொகையை தருவதாக கூறியிருந்தார்.


பாகன் சிறையில் அடைப்பு


15 நாட்களாக யானையை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமின்றி, அடக்கம் செய்ய பாகனிடமே பணம் பறித்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதற்காக சென்னையில் இருந்து வனத்துறை உயர் அதிகாரிகள் நெல்லை வனத்துறையினரை கடுமையாக சாடியுள்ளனர்.

இந்நிலையில், யானை இறந்து மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று வனத்துறை அலுவலகத்திற்கு அசன்மைதீனை

அதிகாரிகள் வரச்சொல்லியுள்ளனர். அவரிடம்

வாங்கிய பணம் பத்தாயிரத்தை திரும்ப கொடுத்தனர். பின்னர் அவர் மீது இந்திய வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவசரம்அவசரமாக நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தப்பிய பீர்முகைதீன்

யானையை வைத்து பல ஆண்டுகள் பணம் சம்பாதித்த பீர் முகைதீனிடம் உரிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி சில மாதங்களுக்கு முன்பு வனத்துறை அபராதம் வசூலித்துள்ளது. ஆனால் தற்போது அதே யானையின் உரிமையாளர் என அசன்மைதீனை கைது செய்துள்ளனர். பீர்முகைதீன் மீது வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளனர்.

வனத்துறையினரின் இந்த நடவடிக்கை வனஆர்வலர்களிடம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swamidoss - Florida,யூ.எஸ்.ஏ
07-செப்-201818:05:19 IST Report Abuse
Swamidoss Is still democracy going on in Tamil nadu????????????????????????????????????????
Rate this:
Share this comment
Cancel
Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
07-செப்-201817:20:00 IST Report Abuse
Muthukumaran பணம் கேட்ட போதே பொது ஜனம் அவர்களை செருப்பால் அடித்திருந்தால் இந்த நிலை இப்போது வந்திருக்காது.
Rate this:
Share this comment
Cancel
Nagarajan S - Chennai,இந்தியா
07-செப்-201811:45:48 IST Report Abuse
Nagarajan S லஞ்சம் வாங்கிய வனத்துறையினருக்கு என்ன தண்டனை?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X