| 'கண்ணால் காண்பது மெய்!' ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் 'விவி பேட்':அரசியல் கட்சியினருக்கு செயல் விளக்கம் Dinamalar
'கண்ணால் காண்பது மெய்!' ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் 'விவி பேட்':அரசியல் கட்சியினருக்கு செயல் விளக்கம்
Advertisement
 
Advertisement

மாற்றம் செய்த நாள்

08 செப்
2018
04:05
பதிவு செய்த நாள்
செப் 08,2018 01:49

திருப்பூர்;வாக்காளர் விரும்பிய சின்னத்தில் ஓட்டுப்பதிவானதை உறுதி செய்து கொள்ளும் வகையில், 'விவி பேட்' கருவிகள், வரும் தேர்தல்களில் பயன்படுத்தப்பட உள்ளது குறித்து, அதிகாரிகள் விளக்கினர்.


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான, 5,880 'பேலட்' யூனிட்கள், 3,200 கன்ட்ரோல் யூனிட்களும், 3,200 வி.வி., பேட் கருவிகளும் தருவிக்கப்பட்டுள்ளன. 'பெல்' நிறுவன தொழில்நுட்ப குழுவினர், கடந்த ஆக., 27 ல் துவங்கி, 5ம் தேதி வரை, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, சோதனை முறையில் இயக்கி சரிபார்த்தனர்.

நேற்று முதல், 'விவி பேட்' கருவிகளுக்கான சரிபார்ப்பு பணி, நேற்று துவங்கியது. திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலத்தில், சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார் முன்னிலையில், கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், 'விவி பேட்' மெஷின்கள் வெளியே எடுக்கப்பட்டன.

'பெல்' நிறுவனத்தின், 15 பேர் அடங்கிய தொழில்நுட்ப குழுவினர், சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்டனர்.

'மெட்டல் டிடக்டர்' மூலம் பரிசோதனை செய்த பிறகே, அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.அறையில் இருந்த அனைவரின் விவரங்களும், போலீஸ் பதிவேட்டில், பதிவு செய்யப்பட்டது. கட்சியினர் முன்னிலையில், 'விவி பேட்' கருவியை பயன்படுத்துவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.


தாசில்தார் முருகதாஸ் தலைமையிலான, தேர்தல் பிரிவு அலுவலர்கள்; தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையிலான, நில வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கிய, வருவாய்த்துறை அலுவலர்கள், இப்பணிகளை மேற்கொண்டனர்.

முதல்கட்டமாக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், 96 ஓட்டு பதிவு செய்து, எண்ணிக்கை நடத்தினர். தொடர்ந்து, சரிபார்ப்பு பணிகள் துவங்கியது.

அப்போது, சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசியதாவது:சரியான வேட்பாளருக்கான பட்டனை அழுத்தியும், வேறு நபர்களுக்கு ஓட்டுப்பதிவாகி விட்டது 'என்பது போன்ற புகார்கள் இனி, இருக்காது. வாக்காளரின் ஓட்டு, அவர்கள் விரும்பிய வேட்பாளரின் சின்னத்தில் பதிவானதை உறுதி செய்து கொள்ளும் வகையில், 'விவி பேட்' கருவிகள், வரும், தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன.


கம்ப்யூட்டர் மூலமாக, வேட்பாளரின் சின்னம், வரிசை எண் விவரம், 'விவி பேட்'டில் பதிவு செய்யப்படும். வழக்கம்போல், 'பேலட்' யூனிட்டில், ஓட்டுப்பதிவு செய்ததும், சில விநாடிகளில், 'விவி பேட்' கருவியில் உள்ள திரையில், சரியான சின்னத்தில் ஓட்டுப்பதிவானது குறித்து தெரியும்.


ஏழு வினாடி காட்சிக்கு தெரியும் காகிதம், அதன்பின், சேமிப்பு கலனுக்குள் சென்றுவிடும். 'விவி பேட்' கருவியில் வரும் ரசீதை, யாரும் கையில் தொடவோ, எடுக்கவோ முடியாது. கண்ணால் மட்டுமே சில விநாடிகள் பார்க்க முடியும்.ஓட்டுப்பதிவு முடிந்ததும், தனி பெட்டியில் வைத்து 'சீல் வைக்கப்படும். ஓட்டு எண்ணிக்கைக்கு உபயோகப்படுத்தப்பட மாட்டாது. ஓட்டுப்பதிவு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டால் மட்டும், தேர்தல் நடத்தும் அலுவலரின் முடிவுப்படி, 'விவி பேட்' ரசீதுகள், சரிபார்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்படும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X