| பெண்கள் பள்ளி சுற்றுச்சுவரில் அத்துமீறல்:ஆபாச போஸ்டர்களால் மாணவிகள் முகம்சுளிப்பு Dinamalar
பெண்கள் பள்ளி சுற்றுச்சுவரில் அத்துமீறல்:ஆபாச போஸ்டர்களால் மாணவிகள் முகம்சுளிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 செப்
2018
06:41

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரில், ஆபாச போஸ்டர்கள், அரசியல் கட்சி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால், மாணவியர் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.பள்ளி வளாக சுற்றுச்சுவரில், அரசியல் கட்சிகளின் போஸ்டர், விளம்பரம், சினிமா பட போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது. இதனால், பள்ளி வளாகமே அலங்கோலமாக காட்சியளிக்கிறது.


இந்நிலையில், பள்ளி வளாக நுழைவாயில் சுற்றுச்சுவரில் ஆபாச பட, 'போஸ்டர்' ஒட்டப்பட்டுள்ளது. பள்ளி வளாக சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மாணவியரை முகம் சுளிக்க வைக்கிறது. சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மாணவியர் படிக்கும் பள்ளி சுவரில், ஆபாச போஸ்டர் ஒட்டப்படுவது வேதனைக்குரியது. இது மாதிரியான போஸ்டர் ஒட்டப்படுவதால், பள்ளிக்கு ஆர்வமாக வரும் மாணவியருக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படுகிறது.


இதனால், மாணவியர் மனதில் தேவையில்லாத எண்ணங்கள் ஏற்படவாய்ப்புள்ளது.

அரசியல் கட்சி, சினிமா பட போஸ்டர்களை ஒட்ட பள்ளி சுற்றுச்சுவரை பயன்படுத்தக்கூடாது. போஸ்டர்கள் அகற்றி, பயனுள்ள வகையில் உள்ள வாசகங்கள், திருக்குறள் மற்றும் விழிப்புணர்வு கருத்துக்ககளை எழுதலாம் அல்லது விழிப்புணர்வு படங்கள் வரையலாம்.

இதன் மூலம் மாணவ, மாணவியர் மட்டுமின்றி, பொதுமக்களும் பயன்பெற முடியும்,' என்றனர்.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X