கோவை:தொழிலாளர் வைப்பு நிதி அலுவலர்கள் கிளப் சார்பில், கேரளாவுக்கு நிவாரண நிதியாக, 2 லட்சத்து 40 ஆயிரத்து 975 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ளத்தால், கேரள மாநிலம் பெரும், பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது. இதற்கு, பல்வேறு தரப்பில், நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், கோவை மண்டல தொழிலாளர் வைப்பு அலுவலகம் சார்பில், அலுவலர்களிடம் இருந்து நிதி திரட்டப்பட்டது.
அலுவலர்களின் பங்களிப்பான, 2 லட்சத்து 40 ஆயிரத்து 975 ரூபாய்கான காசோலை, கேரள முதல்வர் நிவாரண நிதிக்காக, பாலக்காடு கலெக்டர் பாலமுரளியிடம் ஒப்படைக்கப்பட்டது. பி.எப்., உதவி கமிஷனர் ஸ்ரீ சைலேந்திர சிங், இ.பி.எப்., கிளப் தலைவர் கண்ணதாசன், இணை செயலாளர் விஜயகுமார், விளையாட்டு பிரிவு செயலாளர் ஸ்ரீ போடா ஜெய்குமார் ஆகியோர் வழங்கினர்.