மேலுார்:மேலுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.இப்பகுதிகளில் பகல், இரவில் மூன்று மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு செய்யப்படுகிறது. இதனால் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டால் அதிகாரிகள் முறையான பதில் தெரிவிப்பதில்லை. இரவு துாங்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மின்வாரிய உயரதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரை:ஊமச்சிகுளம் வீரபாண்டி, செல்லத்தம்மன்நகரில் 15 நாட்களாக குறைந்தழுந்த மின்சப்ளை செய்யப்படுகிறது. இதனால் வீட்டிலுள்ள மின்சாதன பொருட்கள் சேதமடைகின்றன. இதுகுறித்து திருப்பாலை மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என நுகர்வோர் குற்றம்சாட்டியுள்ளனர்.