கழிவெளி புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டினால்... திருவொற்றியூர் மூழ்கும்! 2015 வெள்ளத்தில் பாடம் கற்றும் திருந்தாத அதிகாரிகள் 'ரமணா' படம் போல ஆகிவிடுமோ என மக்கள் அச்சம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2018
23:25

திருவொற்றியூர், கார்கில் நகரில், நகரத்தின் ஒட்டுமொத்த மழைநீரும் தேங்கி, பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேறும் வகையில் அமைந்துள்ள, கழிவெளி புறம்போக்கு நிலத்தில், குடிசை மாற்று வாரியம், 1,200 வீடுகள் கொண்ட, அடுக்குமாடி குடியிருப்பு
திட்டத்தை செயல்படுத்த இருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தால், திருவொற்றியூர் முழுவதும் வெள்ளத்தில் மூழ்குவதுடன், கழிவெளி நிலத்தில் வீடுகள் உறுதியாக இருக்குமா... என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


திருவொற்றியூர் நகரத்தை, ரயில்வே தண்டவாளம் கிழக்கு, மேற்கு என, இரண்டாக பிரிக்கிறது. மேற்கு பகுதியில், சக்தி கணபதி நகர், ராஜா சண்முகம் நகர், சிவசக்தி நகர் என, 30க்கும் மேற்பட்ட நகர்களில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.மேற்கு பகுதி தாழ்வாக அமைந்துள்ளது. அதனை சுற்றிலும், 5 அடி உயரத்திற்கு ரயில் தண்டவாளம், பக்கிங்ஹாம் கால்வாய் தடுப்பு சுவர், மணலி விரைவு சாலை ஆகியவை மேடாக அமைந்துள்ளன.


இதன் காரணமாக, மழைக்காலத்தில், இந்த பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், திருவொற்றியூர் மேற்கு பகுதியில் தேங்கி, பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேறும்.ஒட்டுமொத்த மழைநீரும், திருவொற்றியூர், கார்கில் நகர் அருகேயுள்ள, கழிவெளி புறம்போக்கு நிலத்தில் தேங்கி, அங்குள்ள ஒரு சிறிய மதகு வழியாக, பக்கிங்ஹாம் கால்வாயில் விழும்.


கடந்த, 2015 பெருமழையின் போது, கொற்றலை உபரிநீர் கால்வாயிலும், புழல், பூண்டி நீர்த்தேக்கங்களில் இருந்தும், 40 ஆயிரம் கன அடிக்கும் அதிகமான உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
இந்த வெள்ளத்தில், திருவொற்றியூர், மேற்கு பகுதி, கடுமையாக பாதித்தது. புழல், கொற்றலை, பூண்டி உபரி கால்வாய்களில் வெளியேறிய வெள்ள நீர், எண்ணுார் முகத்துவாரத்தில், கடலில் கலக்க முடியாமல், பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக, பின்னோக்கி ஏறியது.


இதில், பக்கிங்ஹாம் கால்வாய் நிரம்பி, கால்வாய் ஒட்டிய, எண்ணுார், எர்ணாவூர், திருவொற்றியூர் மேற்கு, இந்திரா நகர் கரிமேடு, ஆர்.கே.நகர் வரை, மார்பளவு வெள்ளம் தேங்கியது.மேற்கில், இரண்டு நாட்கள் தேங்கியிருந்த, ஒட்டுமொத்த வெள்ள நீரும், கழிவெளி புறம்போக்கு நிலம் வழியாக தான், பக்கிங்ஹாம் கால்வாய்க்கு சென்று, கடலில் கலந்தது.


கடந்த வெள்ளத்தின் போது, கார்கில் நகர் கழிவெளி நிலத்தின் முக்கியத்துவத்தை, மண்டலத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரி முதல் அனைவரும் உணர்ந்தனர்.
அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கழிவெளி நிலத்தை அழிக்க, தற்போது, குடிசை மாற்று வாரியம் களம் இறங்கி உள்ளது.


வெள்ளக்காலத்தில் நீர் தேங்கும், 15 ஏக்கர் கழிவெளி நிலத்தில், 130 கோடி ரூபாய் செலவில், 11 அடுக்குமாடி கொண்ட, 1,200 வீடுகள் கட்டும் திட்டத்தை, வாரியம் துவங்கி உள்ளது.இதனால், வெள்ளநீர் வெளியேற முடியாத நிலை ஏற்படும். சில தினங்களுக்கு முன், 10க்கும் மேற்பட்ட நகர்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மக்கள், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.


மழைநீர் தேங்கும், கழிவெளி நிலத்தில், மண் இலகுவாக இருக்கும் என்பதால், பல அடுக்குமாடி குடியிருப்பு கட்டினால், எதிர்காலத்தில், ரமணா படக்கதை போல, எங்கள் வாழ்க்கை ஆகி
விடும் என, மக்கள் அச்சப்படுகின்றனர்.மேலும், கழிவெளி நிலம் வழியாக செல்லும், பிரதான கால்வாயும் அடைபடும்.இவ்வளவு எதிர்ப்பையும், அறவே கண்டுகொள்ளாமல், அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வசதியாக, கழிவெளி நிலத்தில், சாம்பல் மணல் கொட்டி நிரப்பப்பட்டு, பணிகள் துவங்கிவிட்டன.


'இங்கு கட்டப்படும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளால், இனி வரும் வெள்ளக்காலங்களில், மேற்கு பகுதி முழுவதும் வெள்ளத்தில் மிதப்பது நிச்சயம்' என்கின்றனர் பகுதிவாசிகள்.வேற இடமே இல்லையா, 'ஆபீசர்ஸ்'பக்கிங்ஹாம் கால்வாய் ஒட்டிய பகுதிகளில், 80 ஏக்கருக்கும் அதிகமான, கழிவெளி நிலம் இருந்ததாக கூறப்படுகிறது. நகர வளர்ச்சியால், இந்த நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பல இடங்களில் குடியிருப்புகள் வந்துவிட்டன.தற்போது, மீதி இருக்கும் கழிவெளி பகுதிகளில், குடிசைமாற்று வாரியம் குடியிருப்புக்களை கட்டுகிறது. இதனால், ஒட்டுமொத்த திருவொற்றியூருக்குமே ஆபத்து என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


குடிசை மாற்று வாரியம், வேறு தகுதியான இடத்தை தேர்வு செய்யவும், 1960 காலகட்டங்களில் உள்ள ஆவணங்களின் படி, ஒட்டுமொத்தமாக கழிவெளி நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

கார்கில் நகரில், மண் பரிசோதனை செய்யப்பட்ட பின்பே, குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் கட்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இங்கு, குடியிருப்பிற்கு ஏற்ப அஸ்வாதிவாரம் அமைக்கப்படும். குடியிருப்புகள், ஸ்திரத்தன்மையுடன் இருக்கும். கழிவுநீர் வெளியேற, அகலமான கால்வாய் அமைக்கப்படும். மழைநீர் தேங்கி வடிய, 100 மீட்டர் இடம் விடப்படும்.


குடிசை மாற்று வாரிய அதிகாரிகள்

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kundalakesi - VANCOUVER,கனடா
14-செப்-201807:17:04 IST Report Abuse
kundalakesi ethirkaala uyira patri ippa ennaapaa kavalai. kayyila kaasu , kuliya nee vettu.
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
12-செப்-201810:22:13 IST Report Abuse
christ எல்லாமே கமிஷன் அடிப்படையில் தான் செயல்படுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
12-செப்-201802:11:34 IST Report Abuse
Bhaskaran தினமலர் எச்சரிக்கையை அரசு உடனே கவனத்தில்கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தைகைவிடவேண்டும் இல்லையெனில் எதிர்காலத்தில் ஒரே கட்டிடம் இடிந்து பலஉயிர்கள்பலி என்னும் செய்தி நிஜமாகவாய்ப்பு உண்டு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X