கோயம்பேடு:நெற்குன்றத்தில், திறந்து இருந்த வீட்டிற்குள், திடீரென நுழைந்த, மனநலம்
பாதிக்கப்பட்ட மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
நெற்குன்றம், ரங்கசாமி தெருவைச் சேர்ந்த, கவுதம் - மாதுரி தம்பதிக்கு, 2 வயதில் ரக்சனா பெண் குழந்தை உள்ளது.நேற்று முன்தினம் இரவு, வீட்டில், குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது, நுழைவாயில் அருகே, மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.மாதுரியை பார்த்த உடன், அவர் அங்கிருந்து ஓடி, கதவு திறந்து இருந்த, மற்றொரு வீட்டிற்குள் புகுந்துள்ளார்.
இதையடுத்து அப்பகுதி மக்கள், அந்த மூதாட்டியை பிடித்து, கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆதரவற்றோர் காப்பகத்தில், அவரை, போலீசார் சேர்த்தனர்.