கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணைக்கு வரும் நீர்வரத்து சரிந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில், கடந்த, 4ல் அணைக்கு, 401 கன அடிநீர் வந்த நிலையில், பின், படிப்படியாக குறைந்தது. தற்போது, 28 கன அடிநீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இதனால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, நீர்வரத்து சரிவை சந்தித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தாலும், தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில், மழை இல்லாததால், அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. கடந்த, 7ல், 33 அடியாக இருந்த நீர்மட்டம், 32 அடியாக குறைந்துள்ளதால், அணை பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.