கோவை:இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கான, 9வது மண்டல கூடைப்பந்து போட்டியில், பார்க் இன்ஜி., சி.ஐ.டி., பி.எஸ்.ஜி., டெக், கே.பி.ஆர்., கல்லுாரி அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
சென்னை, அண்ணா பல்கலை சார்பில், கோவை- 9வது மண்டல இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கான, கூடைப்பந்து போட்டி, கணியூர் பார்க் இன்ஜி., கல்லுாரியில் நடந்தது. 14 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.
மாணவர்களுக்கான முதல் காலிறுதிப்போட்டியில், பார்க் இன்ஜி., கல்லுாரி அணி, 44-31 என்ற புள்ளி கணக்கில், ஜான்சன் கல்லுாரி அணியையும்; 2வது போட்டியில், சி.ஐ.டி., கல்லுாரி அணி, 44-29 என்ற புள்ளி கணக்கில், பி.எஸ்.ஜி., ஐ டெக் கல்லுாரி அணியையும் வென்றது.
3வது போட்டியில், பி.எஸ்.ஜி., டெக் கல்லுாரி அணி, 55-14 என்ற புள்ளி கணக்கில், பார்க் தொழில்நுட்ப கல்லுாரி அணியையும்; 4வது போட்டியில், கே.பி.ஆர்., கல்லுாரி அணி, 36-35 என்ற புள்ளி கணக்கில், என்.ஜி.பி., தொழில்நுட்ப கல்லுாரி அணியையும் வென்றது. வெற்றி பெற்ற அணிகள், அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.