அனகாபுத்துார்:அனகாபுத்துாரில், பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் திரிந்த, 44 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
அனகாபுத்துார்
நகராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. இந்நகராட்சிக்கு உட்பட்ட,
பாலாஜி நகர் விரிவு, ராமகிருஷ்ணா, திரிப்புரசுந்தரி, திருமுகன்,
எம்.ஜி.ஆர்., தெருக்களில், தெருநாய்கள் அதிகமாக சுற்றித்
திரிகின்றன. அவை, சாலையில் செல்பவர்களை விரட்டுகின்றன.சில
நேரங்களில் கடிக்கின்றன. அதிகரித்து வரும் நாய் தொல்லையை
கட்டுப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து,
புளுகிராஸ் அமைப்பு மூலம், 44 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. இந்த
நடவடிக்கை தொடரும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.