*மின் விபத்தை தவிர்க்க மின் ஆய்வுத்துறை..'அட்வைஸ்'!*வீடுகளில் கட்டாயம் பின்பற்ற வேண்டுகோள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

15 செப்
2018
00:22
பதிவு செய்த நாள்
செப் 15,2018 00:20

மழைக்காலங்களில், மின்கசிவு காரணமாக ஏற்படும் மின் விபத்துகளில், ஒவ்வொரு ஆண்டும், பலர் உயிரிழந்து வருகின்றனர். மின்கசிவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, வீடுகளில் பொதுமக்கள் கையாள வேண்டிய நடைமுறைகளை, மின் ஆய்வுத்துறை வெளியிட்டு உள்ளது.


இது குறித்து, மின் ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


* மின்சார ஒயரிங் வேலைகளை, அரசு உரிமம் பெற்ற, மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும்


* ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற, தரமான மின்சார சாதனங்களை மட்டும், வாங்கி பயன்
படுத்த வேண்டும்


* மின்சார விளக்குகளைபொருத்துவதற்கும், எடுப்பதற்கும் முன்னர், 'சுவிட்ச் ஆப்' செய்ய வேண்டும்


* ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற, வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு, நில இணைப்புடன் கூடிய, மூன்று பின் சாக்கெட் பிளக்குகள் மூலமாக மட்டுமே, மின் இணைப்பு கொடுக்க வேண்டும்


* வீடுகளில் உள்ள மெயின் சுவிட்ச் போர்டில், மின் கசிவு தடுப்பான் பொருத்தினால், மின்கசிவால் உண்டாகும் விபத்தை தவிர்க்கலாம்


* உடைந்த சுவிட்ச் மற்றும் பிளக்குகளை, உடனே மாற்ற வேண்டும், பழுதான மின்சார சாதனங்களை, உபயோகப்படுத்த வேண்டாம்


* 'டிவி' ஆண்டனாவை, வீட்டின் அருகே செல்லும், மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கட்ட வேண்டாம். மேலும், ஆண்டனா ஸ்டே வயரை, மின் கம்பத்தில் கட்ட வேண்டாம்.


* கேபிள், 'டிவி' வயர்களை, மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டாம்


* வீட்டில், எர்த் பைப் போடுவதுடன், அதை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில், சரியாக பராமரிக்க வேண்டும்


* சுவிட்சுகள் மற்றும் பிளக்குகளை, குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்


* ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, வீட்டின் ஒயரிங்களை சோதனை செய்து, தேவைப்பட்டால், மாற்றிக்கொள்ளவும்


* மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள, ஸ்டே வயர் மீது அல்லது மின் கம்பத்தின் மீது, கொடி கயிறு கட்டி, துணி காய வைக்கக்கூடாது

* குளியல் மற்றும் கழிப்பறையில், ஈரமான இடங்களில், சுவிட்சுகளை பொருத்த வேண்டாம்


* சுவற்றின் உள்பகுதியில், மின்சாரம் எடுத்து செல்லும் வயர்களுடன் கூடிய, பி.வி.சி., பைப்புகள், பதிக்கப்பட்டிருந்தால், அப்பகுதிகளில், ஆணி அடிப்பதை தவிர்க்கவும்


* மின்கம்பங்களை, பந்தல்களாக பயன்படுத்தவும், அதன் மீது விளம்பர பலகைகளை பொருத்தவும் கூடாது


* மழைக்காலங்களில், மின்மாற்றி, மின்கம்பம், மின்பகிர்வு பெட்டி மற்றும் ஸ்டே வயர்கள் அருகில், செல்லக்கூடாது


* மழை மற்றும் காற்றால், மேல்நிலை மின்சார கம்பி அறுந்து விழுந்தால், அருகில் செல்லாமல், மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்


* மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில், கட்டடங்களை போதுமான இடைவெளி விட்டு கட்ட வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, மின்வாரியம் மற்றும் ஆய்வுத்துறை அலுவலர்களை
அணுகலாம்


* தமிழக மின் வாரிய மின்மாற்றி மற்றும், துணைமின் நிலையத்திற்காக போடப்பட்டுள்ள வேலியின் அருகில், சிறுநீர் கழிக்க செல்ல வேண்டாம்


* மின்வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள, மரக்கிளைகளை வெட்டுவதற்கு, மின் வாரிய அலுவலர்களை அணுக வேண்டும்


* அவசர நேரங்களில், மின் இணைப்பை துண்டிக்கும் வகையில், மின் கருவிகளின், சுவிட்சுகள் இருப்பிடம் அமைய வேண்டும்


* மின் சாதனங்கள் உபயோகிக்காத போது, சுவிட்சை ஆப் செய்து விடுங்கள்


* மின்சார தீ விபத்திற்கேற்ற தீயணைப்பான்களை மட்டுமே, மின்சாதனங்களில், தீ விபத்து உண்டாகும் போது, பயன்படுத்த வேண்டும் உலர்ந்த மணல், கம்பளி போர்வை, உலர்ந்த ரசாயன பொடி அல்லது கரியமில வாயு ஆகிய தீயணைப்பான்களை பயன்படுத்த வேண்டும்


* மின்சாரத்தால் ஏற்பட்ட தீயை, தண்ணீர் கொண்டு அணைக்கக்கூடாது


* மின்சாரத்தால் தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக மெயின் சுவிட்சை நிறுத்தி விட வேண்டும்


* மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் போது, மின்சார பெட்டி அருகில் செல்ல வேண்டாம். மின் வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்


* எந்த மின் சர்க்யூட்டையும் பளு ஏற்றக்கூடாது. சுவிட்சு, பியூஸ் போன்றவற்றை மாற்றும் போது, சரியான மற்றும் அதே அளவு கொண்ட வற்றை பொருத்த வேண்டும்


* இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்க வேண்டாம். அந்த சமயங்களில், கான்கிரீட் கூரையிலான, பெரிய கட்டிடங்களிலோ, உலோகத்தால் மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சம் அடையலாம் ஆனால், குடிசை வீட்டில், மரத்தின் அடியில், பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழ் நிற்கக்கூடாது. மேலும், அதுபோன்ற சமயங்களில், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு, விலகி செல்ல வேண்டும்


* இடி, மின்னல் காலகட்டங்களில், ஒதுங்கி நிற்க அருகில் இடம் இல்லாத பட்சத்தில், மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத, தாழ்வான பகுதி களை தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், அந்த சமயத்தில், திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் நிற்கக்கூடாது.

- நமது நிருபர் -

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-செப்-201809:09:46 IST Report Abuse
Srinivasan Kannaiya . நுகர்வோர்களை கேட்டு கொள்வதுடன் தமிழக மின்சார வாரியம் டிப்ரிசேசன் ரிசெர்வ் பண்டை உயர்த்தி பழைய மினசார அமைப்புகளை சரி செயதாலே விபத்துகளை பெருமளவு தவிர்க்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X