'எலும்பு கூடாக' மாறிவரும் மின் கம்பங்கள் எந்த நேரத்திலும் சரிந்து உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 செப்
2018
00:26

அம்பத்துாரின் பல்வேறு பகுதிகளில், 'எலும்பு கூடு' போல மாறி, எந்த நேரத்திலும் சரிந்து விழும் நிலையில், 50க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் காட்சியளிக்கின்றன. இதனால் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன், மின் வாரிய அதிகாரிகள் சுதாரிப்பரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


சென்னை, அம்பத்துார், ஒரகடம் - பானுநகர், மேனாம்பேடு துணைமின் நிலைய அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், 8,000க்கும் மேற்பட்ட குடியிருப்பு மற்றும் வணிக ரீதியிலான மின் இணைப்புகள் உள்ளன.பல இடங்களில், மின் கம்பங்கள் படுமோசமாக காணப்படுகின்றன. முற்றிலும் கான்கிரீட் உதிர்ந்து, 'எலும்பு கூடு' போல, இந்த மின்கம்பங்கள்
காட்சியளிக்கின்றன.


அவற்றின் அபாய நிலையை கண்டு அச்சமடைந்த பகுதி மக்கள், ஒரகடம் - பானுநகர் மின் வாரிய அலுவலகத்தில், சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றிக் கொடுக்குமாறு புகார் செய்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள், கண்டுகொள்ளவில்லை.


இந்த காலாவதி கம்பங்களை மாற்றுவதற்கு பதில், பொதுமக்கள் புகாரில் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும், மின் மாற்றி மற்றும் மின் கம்பங்களை, சிமென்ட் பூசி மறைக்க முயற்சித்து
உள்ளனர்.அடுத்து ஓரிரு மாதங்களில், துவங்கும் பருவமழையின் போது, பலத்த காற்றடித்தால், பல மின் கம்பங்கள், மின் மாற்றிகள், காய்ந்த மரக்கிளை போல், முறிந்து விழும் அபாயம் உள்ளது.


அப்போது, மின் விபத்தால், உயிரிழப்புகள் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. அதை உணராமல், மின் வாரியத்தினர், 'ஒட்டு' வேலைகளை செய்து, பொதுமக்களையும், மின் வாரிய உயரதிகாரிகளையும் ஏமாற்றி வருகின்றனர்.மேலும், 'உதிரி பாகங்கள், மின் கம்பங்கள் ஏதும், இருப்பு இல்லை. போதிய களப்பணியாளர்கள் இல்லை. அதனால், இது போல், பழுது பார்க்கும் பணியை, முழுமையாக செய்ய முடியவில்லை' என, நழுவுகின்றனர்.


மின் கட்டணம் செலுத்த தவறினால் மட்டும், அபராதம் வசூலிப்பது, மின் இணைப்பை துண்டிப்பது என, மின்வாரியத்தினர், அதிரடி காட்டுகின்றனர். ஆனால், விபத்து, உயிரிழப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மின் கம்பங்கள், மின் மாற்றிகளை மட்டும் கண்டு கொள்வதில்லை.


நுகர்வோர், அம்பத்துார்


புதிய கம்பங்கள் வீணடிப்பு

கள்ளிக்குப்பம் அருகே, முத்தமிழ் நகர் மாதனாங்குப்பம் பிரதான சாலையில் உள்ள, 'டாஸ்மாக்' கடை எதிரே, 50க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், பல மாதங்களாக வீணடிக்கப்பட்டுள்ளன. அவற்றை, அதே பகுதியில், சேதமடைந்த மின் கம்பங்களை அகற்றி, மாற்றி அமைக்க கூட அதிகாரிகள் முன் வரவில்லை.


துணை மின் நிலையத்தால் ஆபத்து

அம்பத்துார் - செங்குன்றம் சாலையை ஒட்டி, கள்ளிக்குப்பத்தில், 33 கி.வோ., மின்திறன் கொண்ட, மேனாம்பேடு துணை மின் நிலையம் உள்ளது. ஆனால், அந்த நிலையம், தடுப்பு சுவர் இன்றி, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. சாலையில் திரியும் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் உள்ளே நுழைந்து, மின் இணைப்புகளில் சிக்கிக் கொண்டால், நிலைமை பரிதாபமாகும். மேலும், போதை தலைக்கேறிய குடிமகன் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது, மின் மாற்றிகளில் ஏறினால், உயிரிழப்பு சம்பவம் ஏற்படும் ஆபத்து உள்ளது.

எங்கெங்கு பிரச்னை?

அம்பத்துார் ஒரகடம், புதுார், பானுநகர், மேனாம்பேடு ஆயிரங்காத்தம்மன் நகர், கள்ளிக்குப்பம், முத்தமிழ் நகர், மாதனாங்குப்பம் பிரதான சாலை, கிழக்கு பானு நகர் முதல் தெரு, கிழக்கு பாலாஜி நகர், 1வது பிரதான சாலை, மேற்கு பாலாஜி நகர், மேனாம்பேடு துணை மின் நிலையம் எதிரே, பெட்ரோல் பங்க் அருகில் உள்ள மின் வழித்தட ஸ்டெக்சர், அம்பத்துார் - ரெட்ஹில்ஸ் சாலை சுற்றுவட்டாரங்கள் என, 50க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சிதிலமடைந்து, உறுதியிழந்துள்ளன.

-நமது நிருபர்-

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-செப்-201809:10:28 IST Report Abuse
Srinivasan Kannaiya பணம் மில்லையே .பராமரிக்க
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
17-செப்-201801:49:42 IST Report Abuse
Manianஆமாம், ஓட்டுக்கு வாங்குன காசை ஒண்ணா செத்து புது காம்பும் நீங்களே லஞ்சம் கொடுக்காம பணணி தந்தா , கொஞ்சமா செலவுக்கு காசு வாங்கிகிட்டு குடை நாடு தருவோம்- ஷாக் அடி நம்பி, சச்சிதானந்தம், மிஞ்சாற வாரியம் ஊழியர். தலைப்புக்கு : ஓடிவா தலைவா, 9129292929 ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X