| போலீஸ் டைரி Dinamalar
போலீஸ் டைரி
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 நவ
2018
23:12

ஆசிரியை வீட்டில் 16 சவரன் திருட்டுகோடம்பாக்கம், ரங்கராஜபுரத்தைச் சேர்ந்தவர், மதுமதி, 53; அரசு பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம் வெளியே சென்ற அவர், நேற்று மதியம் வீடு திரும்பினார். அப்போது, பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 16 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. அசோக் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.முதியவரிடம் பணம் பறிப்புபட்டாபிராரைச் சேர்ந்தவர், வில்லியம்ஸ், 80. நேற்று மதியம், வீட்டருகே உள்ள வங்கியில், 5,000 ரூபாய் எடுத்துக் கொண்டு நடந்துசென்றுள்ளார். அப்போது வந்த இருவர்,வில்லியம்சிடம் பேச்சு கொடுத்து, 5,000 ரூபாயை பறித்து தப்பினர். பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.கஞ்சா கடத்திய 2 பேர் கைதுகோடம்பாக்கம், சிவன் கோவில் தெருவில், நேற்று முன்தினம் இரவு, வடபழனி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உட்பட, இருவரை பிடித்து விசாரித்தனர்.அதில், சூளைமேட்டைச் சேர்ந்த லட்சுமி, 45, ராமு, 38, என்பதும், கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.வழிப்பறி திருடர்கள் இருவர் கைதுஅயனாவரம் - கொன்னுார் நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், செங்குன்றத்தைச் சேர்ந்த விஜி, 32, சதாம் உசேன், 25, என்பதும், வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, கத்தி, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.தலைமறைவு ரவுடி கைதுதிருவேற்காட்டைச் சேர்ந்தவர், முருகன்; கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். அவரை, செப்டம்பரில், மர்மகும்பல் ஒன்று கடத்தியது. இதுகுறித்து விசாரித்த போலீசார், நான்கு பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த, எண்ணுாரைச் சேர்ந்த, சங்கிலி ராஜேஷ், 24, என்பவனை, போலீசார், நேற்று மாலை கைது செய்தனர்.மின் வாரிய அலுவலகத்தில் திருட்டுமயிலாப்பூர் - சாந்தோம் நெடுஞ்சாலையில், மின் வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் உள்ளது. அங்கு, நேற்றிரவு, பூட்டை உடைத்து புகுந்த மர்மநபர்கள், மின் வடம், காப்பர் கம்பிகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர். மின்வாரிய அலுவலக ஊழியர்களின் புகாரின்படி, மயிலாப்பூர் போலீசார், திருடர்களை தேடி வருகின்றனர்.தீபாவளி சீட்டு நடத்தியவன் ஓட்டம்பட்டாபிராம் அடுத்த அன்னம்பேட்டைச் சேர்ந்தவன், சதீஷ், 35; தனியார் ஆயில் நிறுவன ஊழியர். தீபாவளி சீட்டு நடத்திய இவன், அப்பகுதியைச் சேர்ந்த பலருக்கும், 5 லட்சம் ரூபாய் வரை கொடுக்க வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சதீஷ் தலைமறைவானான்.சீட்டு பணத்தை கேட்டு பலரும் முற்றுகையிட்டதால், தலைமறைவான தன் கணவனை கண்டுபிடித்து தருமாறு, சதீஷின் மனைவி பிரியா, 27, அளித்த புகாரின்படி, பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.ரூ.13,000 பறித்த திருநங்கையருக்கு வலைஓட்டேரி, ஐதர் கார்டன் பிரதான சாலையைச் சேர்ந்தவர், தினேஷ், 28. நேற்றிரவு, அண்ணா மேம்பாலம் வழியாக, இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, அவரை வழிமறித்த மூன்று திருநங்கையர், தினேஷிடமிருந்து, 13 ஆயிரம் ரூபாயை பறித்து தப்பினர். தேனாம்பேட்டை போலீசார், திருநங்கையரை தேடி வருகின்றனர்.மணல் கடத்தியவன் கைதுபட்டாபிராம், அணைக்கட்டுச்சேரி - சோராஞ்சேரி சந்திப்பில், நேற்று முன்தினம் காலை, கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ், 30, மற்றும் போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, 2 யூனிட் மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார், பறிமுதல் செய்தனர்.மேலும், லாரி ஓட்டுனரான, அதே பகுதியைச் சேர்ந்த முருகன், 29, என்பவனை கைதுசெய்தனர்.'மாவா' விற்பனை செய்தவன் கைதுகொத்தவால்சாவடி, கோவிந்தப்பன் தெருவில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கிருந்த ஒருவனை பிடித்து விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த அலோக்குமார், 42, என்பதும், மாவா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவனை கைது செய்த போலீசார், 150 மாவா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X