| தற்காலிக ஆக்கிரமிப்பு: அகற்றாததால் போக்குவரத்து நெரிசல் Dinamalar
தற்காலிக ஆக்கிரமிப்பு: அகற்றாததால் போக்குவரத்து நெரிசல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 நவ
2018
23:52

உடுமலை:தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், நகரின் முக்கிய ரோட்டில், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகியுள்ளது.உடுமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து, ரயில்வே ஸ்டேஷன், உழவர் சந்தை மற்றும் தெற்கு பகுதிக்கு செல்லும் அனைத்து பஸ்களும், ராஜேந்திரா ரோடு வழியாகவே செல்ல வேண்டும்.இந்த ரோட்டில், தினசரி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, மாவட்டக்கல்வி அலுவலகம், அண்ணா பூங்கா என மக்கள் அதிகம் செல்லும் இடங்களும் அமைந்துள்ளன.


இரு வழி போக்குவரத்து அனுமதிக்கப்படும் இந்த ரோட்டில், தற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிகளவு உள்ளன. குறிப்பாக, தினசரி சந்தையையொட்டி, தள்ளுவண்டிகள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன.இதனால், வாகனங்கள் செல்ல குறுகலான இடம் மட்டுமே கிடைக்கிறது. தினசரி சந்தை, வெங்கடகிருஷ்ணா ரோடு உட்பட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள், அனைத்தும் ராஜேந்திரா ரோட்டில் இணையும் போது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.தினசரி சந்தை நகராட்சி கடைகளுக்கும், ரோட்டுக்கும் இடையிலிருந்த ஆக்கிரமிப்புகள், சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை ஒருங்கிணைப்புடன் அகற்றப்பட்டது.


பின்னர், இடைவெளியில், பாதசாரிகளுக்காக, நடைபாதையும் ஏற்படுத்தப்பட்டது.ஆனால், கடைக்காரர்கள், மீண்டும், தங்களுக்கான ஒதுக்கீட்டு பகுதியிலிருந்து குறிப்பிட்ட துாரம் ஆக்கிரமிக்க, அதிலிருந்து தள்ளி, தள்ளுவண்டி கடையினர் இடம் பிடித்து கொண்டனர்.இதனால், போக்குவரத்து மிகுந்த ரோடு, ஒற்றையடிப்பாதையாக மாறி, சில நேரங்களில்,தேசிய நெடுஞ்சாலை வரை, வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது.எனவே, அரசுத்துறையினர் ஒருங்கிணைந்து, மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைபாதையையும் மீட்க வேண்டும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X