| அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணி பொதுப்பணித்துறை அலுவலகம் திறப்பு Dinamalar
அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணி பொதுப்பணித்துறை அலுவலகம் திறப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 நவ
2018
05:13

அவிநாசி:அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்ட பணிக்காக, அவிநாசியில், பொதுப்பணித்துறை கோட்ட அலுவலகம் திறக்கப்பட்டது.கோவை, ஈரோடு மாவட்டங்களில், வறட்சியால் பாதிக்கப்பட்ட ஒன்பது ஒன்றிய மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் வடிவமைக்கப்பட்டது. 1,862 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்ற, அரசு அனுமதியளித்தது.செயல்படுத்த, அவிநாசி, சீனிவாசபுரம், பாரதிதாசன் வீதியில், பொதுப்பணித்துறை கோட்ட மற்றும் வட்ட அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.கண்காணிப்பு பொறியாளராக சிவசாமி, பொறுப்பேற்றுள்ளார். இவரது மேற்பார்வையில், இரண்டு செயற்பொறியாளர்கள், எட்டு உட்கோட்ட பொறியாளர்கள், 30 உதவி பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அலுவலகம் குறித்து கண்காணிப்பு பொறியாளர் சிவசாமி கூறுகையில், ''அத்திக்கடவு - அவிநாசி திட்டம், டெண்டருக்கு முந்தைய நடைமுறையான 'பிட்டிங்' ஆவணங்களுக்கு, அரசு ஒப்புதல் வழங்கும் நிலையை எட்டியுள்ளது. அதன்பின், டெண்டர் விடப்பட்டு, பணி துவங்கும். அதற்கு தயாராக, அவிநாசி, பெருந்துறையில் அலுவலகங்கள் திறக்கப்பட்டு, நிர்வாக ரீதியான பணிகளுக்கு தயாராகி வருகிறோம்,'' என்றார்.நானே கேள்வி; நானே பதில்கடந்த, 10ம் தேதி, அவிநாசியில் நடந்த எம்.எல்.ஏ., விஜயகுமார், மகள் திருமண விழாவுக்காக, கோவை வந்த முதல்வர் பழனிசாமி, நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். பேட்டி முடிவில், ''முக்கியமாக அத்திக்கடவு - அவிநாசி திட்டம் சார்ந்த கேள்வியை யாருமே கேட்கவில்லையே,'' எனக் கூறிய அவர், ''இன்னும் ஒரு மாதத்தில், திட்டப்பணி துவங்கும்,'' என, அவரே கேள்வி கேட்டு, பதிலையும் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X