மதுரை காளவாசல் பைபாஸ் ரோடு மேம்பாலம் தேவையா: நெரிசல் ரோட்டை மறந்த நெடுஞ்சாலைத்துறை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

16 நவ
2018
06:59
பதிவு செய்த நாள்
நவ 16,2018 06:57

மதுரை:மதுரை காளவாசல் -அரசரடி ரோட்டில் நிலவும் நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கு பதில் நெரிசலே இல்லாத பை பாஸ் ரோட்டில் நாற்கர மேம்பாலம் கட்டுமான பணிகளை 54 கோடி ரூபாயில் நெடுஞ்சாலைத்துறை துவங்கியுள்ளது.


நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் காளவாசல் பைபாஸ் ரோடு சந்திப்பில் 54 கோடி ரூபாயில் உயர் மட்ட நாற்கர மேம்பாலம் கட்டுமானப்பணி ஜூலை 15 துவக்கப்பட்டது. இச்சந்திப்பில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 42 ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. 200 அடி அகலம் கொண்ட திண்டுக்கல் ரோட்டிலிருந்து பழங்கநத்தம் செல்லும் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் இல்லை. ஆனால் அரசரடி - தேனி ரோட்டில் நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதியில் மேம்பாலம் கட்ட ஆய்வை 2015ல் 'காஸ்' நிறுவனம் மேற்கொண்டது.


எனவே காளவாசல் பைபாஸ் ரோட்டில் மட்டும் பாலம் கட்டுவது தேவையற்றது. அரசரடி - தேனி ரோட்டையும் இணைக்கும் வகையில் பாலம் கட்டினால் தான் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்.


பொன்மேனி பொறியாளர் சகாதேவன் கூறியதாவது: அரசரடியில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி இருப்பதால் மேம்பாலம் கட்ட இயலாது என நெடுஞ்சாலைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோட்டில் இருந்து 30 அடிக்கு உள்ளே தான் மேல்நிலை தொட்டி உள்ளது. எனவே மேம்பாலம் அமைக்க சிக்கல் இருக்காது. நெரிசல் மிகுந்த அரசரடி- - தேனி ரோட்டை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டாமல் பைபாஸ் ரோட்டில் மட்டும் பணி நடக்கிறது.


நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அரசரடி - தேனி ரோட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வு காண வேண்டும். சரியான திட்டமிடல் இல்லாததால் மக்கள் வரிப்பணம் 54 கோடி ரூபாய் வீணாகும் நிலையுள்ளது என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
17-நவ-201802:40:57 IST Report Abuse
Manian சிபிஐ வரத்துக்கு முன்னாடியே இஙக பாலத்தை கட்டணும், நமக்கு வர வேண்டிய 40 % கட்டிங்கை வாங்கிக்கிடனும், இந்த காண்டிராக்டர் யாருக்கு சொந்தம்ம்னு கண்டு பூடிக்கறதுக்கு முன்னாடி பழஹை தோராகணும்,
Rate this:
Share this comment
Cancel
Vignesh - மதுரை,இந்தியா
16-நவ-201819:13:27 IST Report Abuse
Vignesh நெரிசல் மிகுந்த மதுரை பகுதிகளான தெற்கு வாசல் பாலம் , கோரிபாளையம் ஆகிய பகுதிகளை முதலில் சரி செய்ய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Vignesh - மதுரை,இந்தியா
16-நவ-201819:09:36 IST Report Abuse
Vignesh நமது செல்லூர் விஞ்ஞானி அவர்களின் வழி காட்டுதலின் படியே இந்த பாலம் கட்டபடுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X