| பைக் மீது கார் மோதி கல்லுாரி மாணவர் பலி Dinamalar
பைக் மீது கார் மோதி கல்லுாரி மாணவர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 நவ
2018
23:26

அன்னுார்:அன்னுார் அருகே பைக் மீது கார் மோதியதில், கல்லுாரி மாணவர் பலியானார்.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் மகன் ஹிரிதிக் மாணிக்கம்,19. இவர், புதுச்சேரி லட்சுமி நாராயணா மருத்துவ கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு மாணவர். இவருடைய நண்பரான, மேட்டுப்பாளையம், பாலசுப்ரமணியன் மகன் குகன் பிரசாத்,19, கோவில்பாளையம் தனியார் பொறியியல் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு மாணவர். இருவரும் நேற்று முன்தினம் இரவு, 11:15க்கு மோட்டார் பைக்கில் அன்னுார் - அவிநாசி ரோட்டில் சென்றனர். பைக்கை குகன் பிரசாத் ஓட்டினார்.


அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த கார், பைக் மீது மோதியது. பின்னால் உட்கார்ந்திருந்த ஹிரிதிக் மாணிக்கம், தலையில் காயமடைந்து இறந்தார். பைக் ஓட்டிய குகன் பிரசாத் படுகாயத்துடன் கோவை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். விபத்து ஏற்படுத்திய காரை, ஓட்டி வந்த கேரள மாநிலம், வயநாட்டை சேர்ந்த அப்துல் சலீம், 40, மீது அன்னுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X