தெருவுக்கு தெரு மாநாடு நாய்கள் ஜாக்கிரதை! கடக்க மக்கள் பெரும்பாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

21 நவ
2018
01:59
பதிவு செய்த நாள்
நவ 20,2018 23:33

கோவை:'வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த, 18 மாத ஆண் குழந்தையை, தெரு நாய்கள் கடித்து குதறியதில், குழந்தை படுகாயமடைந்து, சிகிச்சை பெற்று வருகிறது' - சில மாதங்களுக்கு முன், இப்படி ஒரு செய்தியை படித்ததும், அனைவரது உள்ளத்திலும் ஒருவித அச்ச உணர்வு வந்து போகாமல் இருந்திருக்காது.கோவையில் தெருநாய் தொல்லை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


ஒவ்வொரு பகுதியிலும், மாநாடு நடத்தும் அளவுக்கு, இவை பெருகி வருகின்றன.இவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்த, மாநகராட்சி பின்பற்றி வந்த கருத்தடை திட்டம் கிடப்பில் கிடக்கிறது. இதனால், குடியிருப்பு பகுதிகளில் நடந்து செல்வோர், குலை நடுங்கியபடிதான் செல்ல வேண்டியிருக்கிறது.தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது, நிறுத்தப்பட்டு இருப்பதே, இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம்.மாநகராட்சி வேடிக்கைநாய்களை பிடித்து சென்று, கருத்தடை செய்த பின், அவற்றை பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என்கிறது விதிமுறை. இதன்படி, தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் மையங்கள், சீரநாயக்கன்பாளையம் மற்றும் உக்கடத்தில், கோவை மாநகராட்சியால் நடத்தப்பட்டன.நாய்களை கொல்வதை எதிர்க்கும், 'ஹியூமன் பார் அனிமல் சொசைட்டி', 'பீப்பிள் பார் அனிமல்ஸ்' போன்ற அமைப்புகள், நாய்களை பிடித்து கருத்தடை செய்து, மீண்டும் வீதிகளில் விட்டு வந்தன.


இப்போது, மாநகராட்சி உட்பட எவரும் இவற்றை கண்டுகொள்வதில்லை.கருத்தடை செய்ய வழங்கப்படும் நிதி, எவ்வளவு என நிர்ணயிப்பதில் நீடிக்கும் இழுபறியே, இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் என தெரியவந்துள்ளது.


ஒரு நாய்க்கு ரூ.444!மாநகராட்சி சுகாதார அலுவலர் சந்தோஷ்குமார் கூறியதாவது:தெருநாய்க்கு கருத்தடை செய்ய, மாநகராட்சிதரப்பில், நாய் ஒன்றுக்கு 444 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், 50 சதவீதம், பிராணிகள் நல அமைப்பு சார்பில் வழங்கப்படுகிறது.பிற ஊராட்சி பகுதியில், 700 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அடிப்படையாக கொண்டு, தொகையை உயர்த்தி வழங்க, வலியுறுத்தப்பட்டது.


இதற்கான கருத்துரு, நகராட்சி நிர்வாக கமிஷனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே உக்கடத்தில் செயல்பட்டு வந்த, தெருநாய்களுக்கான கருத்தடை மையம், அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் மூடப்பட்டுள்ளது. மாற்று இடம் தேடும் பணி நடந்து வருகிறது. விரைவில் கருத்தடை மையம் செயல்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


நாய்க்கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, உயர்ந்து வரும் நிலையில், உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காண, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாய் துரத்தினால் தீர்வு கிடைக்கும்!காரில் பயணப்பட்டே பழகிப் போன, நம் கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு, இதுவரை நாய்களால் துரத்தப்பட்ட அனுபவம் கிடைக்கவில்லை போலும். அப்படி ஒரு அனுபவம், இவர்களுக்கு வாய்க்கும்போதுதான், மக்கள் அன்றாடம் சந்திக்கும் இப்பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு கிடைக்குமோ!

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-நவ-201805:47:29 IST Report Abuse
Ram thevar, Eastham,London வாயில அடிங்க வாயில அடிங்க, அதை நாய்னு சொல்லாதிங்க ராஜஸ்தான் ஆடுனு சொல்லுங்க
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
21-நவ-201819:03:04 IST Report Abuse
Bhaskaran பிராணிகள் நலச்சங்க உறுப்பினர்கள் வெறிநாய்கடித்தால் அல்லது இரவுப்பணிமுடிந்துவரும்போது இம்மாதிறிநாய்களால் துரத்தப்படும் அனுபவமிருந்தால் அவர்களை கண்டிப்பாக கொல்லத்தான் ஆணையிடுவார்கள் கருதடைசெய்வதாம் பின் அதே இடத்தில விடுவதாம், இவர்கள்இம்மாதிரி தெரு நாய்களை பிடித்து முன்போல் கொன்றுபோடனும் அது ஒன்றே சிறந்தவழி
Rate this:
Share this comment
Cancel
21-நவ-201815:36:21 IST Report Abuse
விவேக் சென்னைக்கு அனுப்பிவையுங்கள். இங்கு நாய்கறிக்கு பஞ்சம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X