'தமிழகத்தில் ஆளும் கட்சியாகும் த.மா.கா': 5ம் ஆண்டு விழா கூட்டத்தில் வாசன் பேச்சு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2018
07:13

அரியலூர்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின், 5ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், அரியலூரில் நேற்று நடந்தது. கடந்த, 2013ம் ஆண்டு, திருச்சியில் மிக பிரம்மாண்டமாக துவங்கப்பட்ட, த.மா.கா.,வின், 5ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம், அரியலூரில் நேற்று நடந்தது. முன்னதாக, முன்னாள் எம்.பி., ஞானதேசிகன், அரியலூரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.


அரியலூர் திருச்சி புறவழிச்சாலையில் உள்ள திடலில், நேற்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில், த.மா.கா., தலைவர் வாசன் பேசியதாவது: இப்படை தோற்பின் எப்படை வெல்லும் என்று கேட்கும் அளவுக்கு, பிரம்மாண்ட கூட்டமாக, இது அமைந்துள்ளது. தேர்தலுக்காக ஆரம்பிக்கப்பட்டதல்ல த.மா.கா., லட்சியத்துக்காக துவங்கப்பட்டது. கஜா புயலால், கடலோர கிராம மக்கள் துன்பத்துக்கு ஆளாகி உள்ளனர். அதை பார்க்கும் போது நெஞ்சம் பதைக்கிறது. அவர்கள் துயர் துடைக்கப்படவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், 15 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். புயல் சேத அழிவை, எவராலும் கணக்கிட முடியாது. மத்திய அரசு, முதல்கட்டமாக, நிவாரண தொகையில் பாதியை வழங்க வேண்டும். தாமதமாக வழங்கப்படும் நிவாரணம், மறுக்கப்பட்டதாகவே இருக்கும்.புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, த.மா.கா., சார்பில், 40 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவிகள் தொடர வேண்டும்.


டெல்டா மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப, மற்ற மாவட்டத்தில் உள்ளவர்களும் உதவ வேண்டும். புயல் நிவாரணமாக தமிழக அரசு அறிவித்துள்ள 1,000 கோடி ஒதுக்கீடு, யானை பசிக்கு சோளப்பொரி தான்.மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மீது, மக்கள் நம்பிக்கை இழந்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளுக்கு, மத்திய அரசு, ஆக்கப்பூர்வ தீர்வு ஏற்படுத்தவில்லை. மக்கள் ஏற்காத திட்டங்களை, அவர்களின் எதிர்ப்பை தாண்டி திணிக்கும் அரசாக உள்ளது.புயல் பாதித்தவர் நிவாரணத்தை கொடுக்காமல், தமிழகத்தை மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. தமிழகம் அரசும் அழுத்தம் கொடுக்க தவறிய அரசாக உள்ளது. கர்நாடகாவில், மேகதாது அணை கட்டப்பட்டால், காவிரி டெல்டா மாவட்டங்கள், பாலைவனமாக மாறும். இதை கண்டித்து, வரும் 8ல், கிருஷ்ணகிரியில், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சியாக த.மா.கா., உள்ளது. ஒரே கருத்துடைய கட்சியோடு இணைந்து, கூட்டணியை உருவாக்குவோம். சட்டசபைக்கும், பார்லிமென்டுக்கும், நம் கட்சி உறுப்பினர்கள் செல்வர். பணநாயகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஜனநாயகத்தை வெற்றி பெற வைப்பர். ஆளும் கட்சியும் அல்ல, ஆண்ட கட்சியும் அல்ல, த.மா.கா., ஆளப்போகும் சுட்சி.இவ்வாறு அவர் பேசினார்.


ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில், மாநில துணை தலைவர் கோவை தங்கம், பொதுச் செயலர் சக்திவடிவேல், முன்னாள் எம்.எல்.ஏ., விடியல் சேகர், முன்னாள் எம்.பி., ஞானதேசிகன், இளைஞரணி தலைவர் யுவராஜா, விவசாய பிரிவு தலைவர் நாகராஜன், தலைமை நிலைய செயலர்கள் அசோகன், சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மற்றும் மூத்த தலைவர்கள், முன்னாள் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


 

Advertisement
மேலும் அரியலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X