| சிறுமியை மணந்த 'அப்பா' கைது Dinamalar
சிறுமியை மணந்த 'அப்பா' கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 டிச
2018
07:13

அரியலூர்: அரியலூர் அருகே, 16 வயது சிறுமியை மணந்த, 15 வயது சிறுமியின் தந்தையை, போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம், படைநிலை கிராமத்தைச் சேர்ந்தவன் செல்வகுமார், 36; திருப்பூரில் தங்கி, அங்குள்ள பனியன் கம்பெனிகளுக்கு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் ஏஜென்டாக செயல்பட்டு வந்தான். இவனுக்கு, திருமணமாகி தமிழ்ச்செல்வி என்ற மனைவி மற்றும் 15, 13 வயதில் மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடலூர் மாவட்டம், பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த, 16 வயது சிறுமியை, செல்வகுமார் திருமணம் செய்து, நவ., 28ல் படைநிலை கிராமத்துக்கு வந்தான். அதிர்ச்சியடைந்த அவனது மனைவி தகராறு செய்தார். 'பிரச்னை செய்தால், கொன்று விடுவேன்' என, செல்வகுமார் மிரட்டி உள்ளான். இதுகுறித்து, தமிழ்ச்செல்வி கொடுத்த புகாரின்படி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மைனர் பெண்ணை, அவரது பெற்றோரிடம் போலீசார் அனுப்பி வைத்தனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X