| மூன்று மாவட்ட இறகுபந்து போட்டி காளையார்கோவில் அணி வெற்றி Dinamalar
மூன்று மாவட்ட இறகுபந்து போட்டி காளையார்கோவில் அணி வெற்றி
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 டிச
2018
07:14

ராமநாதபுரம்:மூன்று மாவட்ட இறகு பந்து போட்டியில் காளையார்கோவில் அணி முதல் பரிசு பெற்றது.

ராமநாதபுரம் இறகுபந்து சங்கம் சார்பில் 40வயதிற்கு மேற்பட்டோருக்கான

இரட்டையர் இறகுபந்து போட்டி ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. ராமநாதபுரம் இறகு பந்தாட்ட கழக செயலாளர்

பிரபாகரன் போட்டியை துவக்கி வைத்தார்.

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 32 அணிகள் போட்டியில் பங்கேற்றன.

காளையார்கோவில் சாத்தையா, ஜெயக்குமார் அணி முதலிடத்தை பெற்று சுழற்

கோப்பையை தட்டிச்சென்றது. ராமநாதபுரம் மகேந்திரன், பெஞ்சமின் அணியினர் இரண்டாமிடத்தையும், காரைக்குடி சசிக்குமார், இளமாறன், ஆர்.எஸ்., மங்கலம் சக்தி, சக்திவேல் அணியினர் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.


 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X