நெல்லை மாவட்டம், மேலப்பாட்டத்தைச் சேர்ந்தவர் நாராயணன், 34. இவரது மனைவி மகராசி, 29. சிவமகேஷ்வரி, 3, என்ற பெண் குழந்தை இருந்தது. கருத்து வேறுபாட்டால், மகராசி, குழந்தையுடன், தாய் வீட்டில் வசித்தாள்.நேற்று காலை, குழந்தை சிவமகேஷ்வரி, வீட்டில் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தாள். மகராசியை காணவில்லை. போலீஸ் விசாரணையில், மகராசி, குழந்தைக்கு அரளி விதை அரைத்து கொடுத்து, தப்பி சென்றது தெரிந்தது. அருகில் உள்ள காட்டுப் பகுதியில் மறைந்திருந்த மகராசியை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.