அரசு மருத்துவமனையில் மின்தடை: போராட்டம் நடத்திய நோயாளிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2018
10:03

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், இரவில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதால், அரசு மருத்துவமனை நோயாளிகள், தர்ணா போராட்டம் நடத்தினர். குமாரபாளையம், அரசு மருத்துவமனையில், உள் நோயாளிகளாக, 100க்கும் மேற்பட்டோர் உள்ளனர். நேற்று மாலை, 6:30 மணி முதல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. சிறிய குழந்தைகள், பெரியவர்கள் என பல தரப்பினரும் இரவில் தவித்தனர். மருத்துவமனை வளாகம் இருளில் மூழ்கியது. இதனால், மருத்துவமனை நுழைவு பகுதியில் நோயாளிகள் ஒன்று திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இது குறித்து அவர்கள் கூறியதாவது: நேற்றும், இதே போல் ஒன்றரை மணி நேரம் இரவில் மின் தடை ஏற்பட்டது. குழந்தைகள் உள்பட பெரும்பாலோர் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். குழந்தைகள் வார்டு அருகில் குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. இங்கு உற்பத்தியாகும் கொசுக்களால் பாதிப்பு ஏற்படுகிறது. ஜெனரேட்டர் பழுதாகிவிட்டது. யு.பி.எஸ்., வேலை செய்யவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


இதுகுறித்து மருத்துவ அலுவலர் பாரதி கூறியதாவது: வளாகத்தில் உள்ள இரண்டு ஜெனரேட்டர்களும் பழுதாகி உள்ளன. யு.பி.எஸ்., இணைப்பு தர சொல்லியுள்ளேன். மின்வாரிய அதிகாரிகளிடமும் பேசியுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார். நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் உஷா கூறுகையில், ''இதுகுறித்து, உடனே உரிய நடவடிக்கை மேற்கொள்கிறேன்,'' என்றார். மின்வாரிய உதவி பொறியாளர் ஸ்ரீதர் கூறுகையில், ''அரசு மருத்துவமனை பகுதி அருகே உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டுள்ளது; விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும்,'' என்றார்.


 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X